தமிழ்நாடு:



  • அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் புறக்கணித்த ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு பேரவையில் தீர்மானம்

  • யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கை விசாரிக்கை தடையில்லை: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

  • மின்சார வாரிய ஊழியர்கள் இன்று அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  • தமிழ்நாட்டில் இன்று முதல் 13ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும் - வானிலை ஆய்வு மையம் தகவல் 

  • பொங்கல் சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணிக்க இதுவரை 1.33 லட்சம் பேர் முன்பதிவு - போக்குவரத்துத்துறை அறிவிப்பு

  • 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்: முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

  • ஜனவரி 13 ம் தேதி வரை தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

  • மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளை நிர்வாகவே மூட வேண்டும் - அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் பேட்டி 

  • ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் பல்கலை கழகங்களுக்கு ஆசிரியர்கள் நியமனம்- தமிழக அரசு புதிய அதிரடி 


இந்தியா:



  • சபரிமலையில் 14ம் தேதி மகரவிளக்கு : பாதுகாப்பு பணியில் 3 ஆயிரம் போலீஸ் குவிப்பு

  • பிரதமர் மோடி புகழாரம்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய தேசத்தின் தூதர்கள் 

  • உத்தர பிரதேசம் விரைவு சாலையில் அடுத்தடுத்து விபத்து கடும் பனி மூட்டத்தால் 7 பேர் பரிதாப பலி 

  • ஜனநாயகத்தில் ஒரு நபரை கடவுளாக்குவது சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் : பிரதமர் மோடியை விமர்சித்த காங்கிரஸ் தலைவர் கார்கே

  • ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில் நேற்று பெண்கள் அதிக அளவில் பங்கேற்கவுள்ளதாக ஜோதிமணி எம்.பி ட்வீட் செய்துள்ளார்.


உலகம்: 



  • தோல்வியை ஏற்க முன்னாள் அதிபர் மறுப்பு: பிரேசிலில் வரலாறு காணாத வன்முறை - நாடாளுமன்றம், உச்சநீதிமன்றம், அதிபர் மாளிகை நொறுக்கப்பட்டது.

  • மத்திய செனகலில் பேருந்துகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொண்டதில் 40 பேர் உயிரிழந்தனர்.

  • 2100-ஆம் ஆண்டிற்குள் உலகின் 83% பனிப்பாறைகள் உருகக்கூடும் - ஆய்வாளர்கள் வெளியிட்ட ஷாக் ரிப்போர்ட்

  • சாலையின் மறுபுறத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் மீது எரிவாயு சிலிண்டர் விழுந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  • இந்திய - அமெரிக்க தன்பால் ஈர்ப்பின தம்பதி விரைவில் பெற்றோராக உள்ளதாக, புகைப்படங்களை வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


விளையாட்டு:



  • இந்தியா - இலங்கை இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் கவுகாத்தியில் தொடங்க இருக்கிறது.

  • டி20 போட்டிகளில் இருந்து விலகுவது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

  • இங்கிலாந்து அணி கிட்டத்தட்ட டெஸ்ட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளில் இருந்து வெளியேறினாலும் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 

  • தென்னாப்பிரிக்கா 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. 

  • நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி