கணவன் மனைவிக்குள் புரிதலும், விட்டுக்கொடுத்தலும் இல்லாவிட்டால் வாழ்க்கையானது மிகவும் சிரமத்திற்குள்ளானதாக மாறிவிடும். பல குடும்பங்களில் கணவனின் சிரமம் தாங்க முடியாமல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்து பார்த்திருப்போம். ஆனால், உத்தரபிரதேசத்தில் மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் காவல் நிலையத்திற்கு சென்று கணவன் புகார் அளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ளது லக்னோ. இங்குள்ள ஆஷியானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் ஜிதேந்திரசிங். இவரது மனைவி சோனம். இவர்கள் இருவக்கும் ஃபேஸ்புக் மூலமாக பழக்கம் ஏற்பட்டு, கடந்த 2021ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சோனம் கபூர் தனது கணவரின் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
பின்னர், மற்ற குடும்பங்களில் நடப்பதை போல கருத்து வேறுபாடு காரணமாக தனிக்குடித்தனம் செல்ல சோனம் கணவர் ஜிதேந்திரசிங்கிடம் அறிவுறுத்தியுள்ளார். தனது மாமனார் மற்றும் மாமியாருடன் இணைந்து வாழ முடியாது என்று சோனம் உறுதியாக சொன்னதையடுத்து, ஜிதேந்திரசிங் சோனமை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் சென்றுவிட்டார்.
ஆனால், தனிக்குடித்தனம் சென்ற பிறகு சோனமால் கணவன் ஜிதேந்திர சிங்கிற்கு கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டு வந்தது. பல முறை கணவனிடம் அவரது வருவாய்க்கு அதிகமான பொருட்களை வாங்கித்தரச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளார். தொடக்கத்தில் ஜிதேந்திரசிங் தனது மனைவியிடம் மிகவும் பொறுமையாக கூறியுள்ளார். ஆனால், நாட்கள் செல்ல செல்ல சோனம் ஜிதேந்திரசிங்கிடம் மிகவும் கடுமையாக நடந்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் சோனம் ஜிதேந்திரசிங்கிடம் தொடர்ந்து பணமும், விலையுயர்ந்த காரும் கேட்டுள்ளார். அதுமட்டுமின்றி ஜிதேந்திரசிங்கின் தாயின் பெயரில் இருந்த வீட்டையும் தனது பெயருக்கு மாற்றித்தருமாறு கேட்டுள்ளார். தான் கேட்டதை செய்யாவிட்டால் விவகாரத்து செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். இதனால், ஜிதேந்திரசிங் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
மனைவியினால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான ஜிதேந்திரசிங் தனது மனைவி கொடுமைப்படுத்துவதாக ஆஷியானா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் கணவன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடும்ப உறவுகளுக்குள் விட்டுக்கொடுத்தும், அனுசரித்து செல்லாவிட்டால் கடும் இன்னல்களை சந்திக்க நேரிடும் என்பதற்கு இந்த வழக்கும் ஒரு உதாரணமாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க: Delhi: பிரிட்டிஷ் கவுன்சில் வேலையை உதறிவிட்டு டீக்கடை போட்ட இளம்பெண் பட்டதாரி...! வாவ் சொல்ல வைக்கும் நோக்கம்..!
மேலும் படிக்க: Bengaluru: டாக்டரை போல் நடித்து மருத்துவமனையில் மூதாட்டியிடம் நகை திருட்டு.. பெங்களூரில் நடந்த வினோத சம்பவம்..