பெங்களூருவில், மருத்துவர் போல் நடித்து மூதாட்டியிடம் நகைகளை திருடிச் சென்ற பெண் மீது காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.


பெங்களூரில் அசோக் நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரமேஷ் என்றவர் தனது தாயார் சரசம்மாவை மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார். அப்போது மர்மமான பெண் ஒருவர், டாக்டர் உடையில் வந்து சரசம்மாவை பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறி அவரை வெளியே அனுப்பியுள்ளார்.  அந்த பெண் மூதாட்டியின் கழுத்தில் இருக்கும் தங்க செயின் மற்றும் விரலில் இருந்த மோதிரத்தை திருடிச் சென்றுள்ளார்.


சற்று நேரத்திற்கு பின் ரமேஷ் தனது தாயாரை காண வரும் போது நகை திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சுமார் 2.5 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடிச் சென்றுள்ளார் என தெரியவந்துள்ளது. டாக்டரை தேடிச் சென்ற போது அவர் அங்கு இல்லை. பின்னர் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தார். பின்னர் சிசிடிவி காட்சிகளை பரிசோதித்து பார்த்தப் போது அந்த பெண் டாக்டரை போல் வேடமிட்டு வந்ததை கண்டுபிடித்தனர்.


சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் நோயாளியிடம் நகைகளை திருடிய பெண்ணை வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஒரு பெண் ஒரு மருத்துவமனையில் மருத்துவராக போஸ் கொடுத்து நோயாளிகளிடம் நகைகளை திருடியுள்ளார். அசோக் நகர் காவல்நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அந்த பெண் மீது மருத்துவமனை அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். அவர் பிற நோயாளிகளிடமிருந்து நகையை திருடிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  


சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஈச்சங்குப்பம் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் வெங்கடேசபெருமாள் வயது 24. இவருக்கு அதே பகுதியை சேர்ந்த போலி மருத்துவர் செல்வகுமார் என்பவர் ஊசி செலுத்தியுள்ளார். இந்த நிலையில், போலி மருத்துவர் செலுத்திய ஊசியால் தன்னுடைய மகனுக்கு எய்ட்ஸ் நோய் பரவி இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெற்றோர் முற்றுகையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Jallikattu: சீறும் காளைகள்.. தொடங்கியது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு... பச்சைக்கொடி அசைத்து தொடங்கி வைத்தார் உதயநிதி..!


CM Stalin : ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி உதவி...முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..!


Jallikattu: 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் காளை முட்டியதில் உயிரிழப்பு - பாலமேடு ஜல்லிக்கட்டில் சோகம்