இந்தியாவின் பல்வேறு பகுதிகள் அவ்வப்போது வருமானவரித்துறை சோதனை நடப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தலுக்கு முன்பாக வருமானவரித் துறை சோதனை நடத்தும். அந்தவகையில் தற்போது உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஒரு தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 


கான்பூர் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின். இவர் வாசனை திரவியம் தொடர்பான தொழிலை செய்து வருகிறார். அத்துடன் சொந்தமாக வேறு சில சிறிய தொழில்கள் மற்றும் பெட்ரோல் பங்க் உள்ளிட்டவற்றை வைத்துள்ளார். இவருக்கு சொந்தமான இடங்களில் நேற்று முதல் வருமானவரித்துறை மற்றும் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கான்பூர், மும்பை, குஜராத் உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரித்துறை சார்பில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 




அந்த சோதனையில் கணக்கில் வராத  பல கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருடைய வீட்டில் இரண்டு அலமாறிகளில் கட்டுக்கட்டாக அடிக்கி வைக்கப்பட்ட பணம் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளன. இவற்றுடன் அங்கு கிடைத்த பணத்தை அதிகாரிகள் எண்ணும் படம் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் தரையில் அமைந்து பணத்தை அடுக்கி வைத்து பணம் எண்ணும் இயந்திரத்தை வைத்து எண்ணி வருகின்றனர். தற்போது வரை வெளியாகியுள்ள தகவலின்படி இதுவரை அவரிடம் இருந்து கணக்கில் வராமல் 150 கோடி ரூபாய் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இன்னும் அவருக்கு சொந்தமான  இடங்களில் வருமானவரித்துறை சோதனை ஒருநாளுக்கு மேலாக நடைபெற்று வருகின்றன. 


இந்த பரிசோதனையில் இவர் போலியான இன்வாயிஸ் வைத்து பணத்தை பரிவர்த்தனை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இவர் போலியாக 200 இன்வாயிஸ்களை தலா 50 ஆயிரம் ரூபாய்க்கு போட்டு அதற்கான பணத்தை தன்னுடைய நிறுவனத்தில் நான்கு லாரிகளில் அடுக்கி வைத்துள்ளது தெரியவந்துள்ளது. இவருடைய இடத்திற்கு முதலில் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்த சென்றுள்ளனர். அதன்பின்னர் அவர் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்து சோதனை நடத்த அழைத்துள்ளனர். தற்போது வருமானவரித்துறை மற்றும் ஜிஎஸ்டி புலனாய்வு அதிகாரிகள் ஆகிய இருவரும் சோதனை நடத்தி வருகின்றனர். இங்கு கிடைத்துள்ள பணத்தை எண்ணும் பணியில் பாரத் ஸ்டேட் வங்கி ஊழியர்கள் உதவி செய்து வருவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. 


மேலும் படிக்க: 


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண