நாடு முழுவதும் வரும் பிப்ரவரி மாதம் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, கூட்டணிகளும் பிரிக்கப்பட்டு அரசியல் பரப்புரைகள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இவற்றில், உத்தரபிரதேச மாநிலத் தேர்தல் நாட்டில் உள்ள அனைவராலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.


உத்தரபிரதேசத்தில் அமைச்சராக பொறுப்பு வகிப்பவர் லட்சுமிநாராயண் சவுத்ரி. இவர் வரும் சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. சார்பில் போட்டியிட உள்ளார். பா.ஜ.க. சார்பில் சாட்டா தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். தேர்தலில் யார் போட்டியிட்டாலும் அவர்களை குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்கள் முன்மொழிவது, வழிமொழிவது என்பது வழக்கம். இந்த வகையில், அமைச்சர் லட்சுமி நாரயணன் சவுத்ரியையும் ராம்வீர்சிங் என்பவர் முன்மொழிந்திருந்தார்.




இந்த நிலையில், ராம்வீர்சிங் நேற்று மதுராவில் உள்ள கோசிகலான் பகுதியில் உள்ள பைகோன் என்ற கிராமத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள கோவிலுக்கு சென்றிருந்தார். அவருடன் அவரது உதவியாளரும் உடனிருந்தார். அப்போது, திடீரென மர்மகும்பல் ஒன்று ராம்வீர்சிங்கை வழிமறித்தது.


அப்போது, அவர்கள் சட்டென்று அவர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியால்  ராம்வீர்சிங்கை நான்குமுறை சுட்டனர். இதில், உடலில் குண்டுபாய்ந்த ராம்வீர்சிங் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவரை சுட்டுக்கொன்ற கொலையாளிகள் தப்பி ஓடினர். இந்த தகவலையறிந்த அமைச்சர் லட்சுமிநாரயண்சிங் இது ஒரு அரசியல் கொலை. ராம்வீர்சிங்கிற்கு எதிரிகள் யாருமே இல்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராம்வீர்சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.  தகவலறிந்த பா.ஜ.க.வினர் ஆக்ரா - டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.




மேலும், தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்கும் பணியில் உத்தரபிரதேச போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், பா.ஜ.க. வேட்பாளரை முன்மொழிந்தவரை சுட்டுக்கொன்றிருப்பது மாநிலத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரபிரதேசத்தில் ஆட்சியை தக்கவைக்க ஆளுங்கட்சியான யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க.வும், முன்னாள் முதல்வரான அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதியும் தீவிரமாக போட்டியிட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வை காட்டிலும் சமாஜ்வாதிக்கு மிகுந்த செல்வாக்கு உருவாகியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க : Pocso | பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த ஹெட்மாஸ்டர்.. பரவிய வீடியோ.. பாய்ந்தது போக்சோ..


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண