Pocso | பள்ளி மாணவிக்கு முத்தம் கொடுத்த ஹெட்மாஸ்டர்.. பரவிய வீடியோ.. பாய்ந்தது போக்சோ..

வீடியோவில், பள்ளி தலைமை ஆசிரியர் தனது அறையில் பள்ளி மாணவி ஒருவரை முத்தமிடுகிறார். அதனை பள்ளி மாணவர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.

Continues below advertisement

பள்ளியில் மாணவிக்கு முத்தம் கொடுத்தபோது மாணவர்கள்  ஜன்னல் வழியாக படம் பிடித்துள்ளனர்.

Continues below advertisement

கர்நாடக மாநிலம் மைசூருவில் மாணவியை முத்தமிட்டதாக பள்ளி தலைமை ஆசிரியர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் தலைமை ஆசிரியர் தனது அறையில் சிறுமிக்கு முத்தமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து இந்த சம்பவம் வெளியே தெரிய வந்துள்ளது. இந்த வீடியோவை மாணவர்கள் ஜன்னல் வழியாக படம் பிடித்துள்ளனர். கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் உள்ள கோட்டே நகரத்தில் உள்ள ஒரு பள்ளியில் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

மேலும் படிக்க: Crime | கண்கள் பிடுங்கப்பட்ட நிலையில் சிறுமியும், சிறுவனும் கொலை.. காவல்துறை தீவிர விசாரணை

வீடியோவில், பள்ளி தலைமை ஆசிரியர் தனது அறையில் பள்ளி மாணவி ஒருவரை முத்தமிடுகிறார். அதனை பள்ளி மாணவர்கள் சிலர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.  அறையின் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது, யாரோ தங்களை படம்பிடிக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்ந்தபோது, ​​​​மாணவி மறைந்து கொள்ள முயல்கிறார். தலைமை ஆசிரியர் ஜன்னல் நோக்கி நகர்ந்து வருகிறார்.

கர்நாடக தலைமை ஆசிரியர் மாணவிக்கு முத்தம் கொடுத்த வீடியோ வைரலாக பரவியதால், கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் கொதிப்படைந்தனர்.பள்ளி தலைமை ஆசிரியரின் அநாகரீக செயலால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். 

மேலும் படிக்க: Crime | தலித் இளைஞரை தாக்கி சிறுநீர் குடிக்கச்செய்த கொடூரம்… எட்டு பேர் மீது வழக்குப்பதிவு…

இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு குறித்து தலைமை ஆசிரியரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola