காலங்கள் போக போக மருத்துவத்துறை பல உச்சபட்ச வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஆனால் அதற்கே சவால் விடும் வகையிலும் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடைபெறுகிறது. குறிப்பாக குழந்தைகள் வித்தியாசமானதாக பிறக்கின்றன. அதன்படி, இரட்டை குழந்தைகள், இரண்டு தலையுடன் கூடிய குழந்தைகள், கொம்புடன் பிறக்கும் குழந்தைகள், முகச்சிதைவு குழந்தைகள் என பல விசித்திர தோற்றத்துடன் குழந்தைகள் பிறந்து வருகின்றன. என்னதான் புதிய புதிய மருந்துகள் கண்டுபிடித்தாலும், குழந்தைகள் பிறக்கும் போதே அரிதாக பிறந்துதான் வருகின்றனர். அப்படி தான் இந்தியாவில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.
பெண் உறுப்புகளுடன் பிறந்த ஆண்
உத்தர பிரதேச மாநிலத்தில் ஃபரிதாபாத் நகரம் அமைந்துள்ளது. இங்கு விசித்திரமான குழந்தை ஒன்று பிறந்துள்ளது. உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அந்த ஆண் குழந்தைக்கு பெண்களுக்கு மட்டும் இருக்கும் கருப்பை மற்றும் ஃபலோபியன் (Fallopian) குழாய்கள் இருந்துள்ளன. அந்த குழந்தைக்கு ஆண் மற்றும் பெண் இருவரின் பிறப்புறுப்புகளும் இருந்துள்ளன.
இப்படி பிறந்த அந்த குழந்தைக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த பிரச்சனையோடு அவர் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். தற்போது அவருக்கு 30 வயது. இப்படி இரு பாலரின் பிறப்புறுப்புகள் இருப்பதால் அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மருத்துவர்களிடம் கவுன்சிலிங் சென்று இந்த பாதிப்புக்கு ஒரு முடிவு எடுத்தார்.
மருத்துவ பரிசோதனைகளில் அவருக்கு முல்லேரியன் டக்ட் சிண்ட்ரோம் (persistent mallerian duct syndrome) என்ற ஒரு அரிய மரபணு நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். இது மிக மிக அரியவகை நோயாகும். உலகெங்கிலும் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பெண்களுக்கு மட்டும் இருக்கக் கூடிய ஃபலோபியன் குழாய்கள், கருப்பையுடம் 30 வயது வரை இவர் இருந்துள்ளார்.
அறுவை சிகிச்சை
இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. குழந்தை பெற்றுக் கொள்வதற்கு எந்த தடையும் இல்லாமல் ரோபோடிக் அறுவை சிகிச்சை (கீஹோல்) செய்யப்பட்டது. ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு வெற்றிகரமாக ஃபலோபியன் குழாய்கள், கருப்பை அகற்றப்பட்டன.
அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு அவரை மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர். அதன் பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆண் உடலில் பெண் உறுப்புகள் 30 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க