பயணம் எல்லோருக்கும் பிடித்த ஒன்றுதான், பிடிக்கவில்லை என்றாலும் பயணித்து ஆகவேண்டிய சூழல் அனைவருக்கும் வாய்திருக்கும். அப்போது சில நேரங்களில் நமது உடைமைகளை எங்காவது மறந்து வைத்துவிட்டு வந்துவிடுவது பல நேரங்களில் நடக்கும் விஷயம். நமது பைகளையோ, மொபைல் போனையோ, பர்ஸையோ, மறந்து வைத்திருப்போம். பல சமயங்களில் அவை திரும்பி சென்று பார்த்தால் இருப்பதில்லை. அரிதாக யாரும் காணாமல் இருந்தால் கிடைக்கலாம், அல்லது அரிதான நல்லுள்ளங்கள் எடுத்து நம்மிடம் சேர்க்க முயற்சிக்கலாம். இன்ஸ்டாகிராம் பயனர் @stephandpete_ என்ற பெயரில் உள்ள வெளிநாட்டு பெண் ஒருவருக்கு சமீபத்தில் இதே போன்ற ஒன்று இந்தியாவில் நடந்துள்ளது.



இன்ஸ்டாகிராமில் மெசேஜ்


அந்த பெண் இந்தியாவில் ரயிலில் சென்றபோது, பர்ஸை மறந்துவிட்டு ஸ்டேஷனில் இறங்கியுள்ளார். சிறிது நேரத்தில், சிராக் என்பவர் அவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மெஸேஜை அனுப்பியுள்ளார். அவர் தனது பர்ஸை பார்த்ததாகவும், அதனை பத்திரமாக வைத்திருப்பதாகவும், திருப்பித் தருவதாகவும் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்: Womens T20 worldcup: உலகக்கோப்பை ஃபைனல்: தென்னாப்ரிக்காவை வீழ்த்தி 6-வது முறையாக கோப்பையை வெல்லுமா ஆஸ்திரேலியா?


பணத்தை மறுத்த சிராக்


அந்தப் பெண் செய்தியைச் பார்த்து, சிராகின் உணவகத்திற்குச் சென்றபோது, அங்கு அவர் அவரது பர்ஸை கொடுத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அந்த வெளிநாட்டு பெண்மணி வெளியிட்டுள்ள விடியோ கிளிப்பில், அவர் நன்றி தெரிவிப்பதையும், சிராக்கிற்கு பணம் கொடுப்பதையும் காணமுடிகிறது. ஆனால் அந்த பணத்தை அவர் வாங்காமல் மறுக்கிறார்.






பணம் கொடுப்பது தவறென்று உணர்ந்தேன்


பதிவின் தலைப்பில், "உண்மையான கருணைச் செயலுக்காக பணம் கொடுப்பது எவ்வளவு தவறு என்பதை நான் (3,000+ மடங்கு) கற்றுக்கொண்டேன் (அமெரிக்காவில் கலாச்சாரம் அப்படித்தான் இருக்கும்), இது போன்ற பொதுவான விஷயங்களை இந்தியாவில் நான் ரசிக்கிறேன். தொலைந்துபோய் கண்டுபிடிக்கப்பட்ட மற்ற கதைகள் அனைத்தையும் நான் நேசிக்கிறேன்! நான் எனது பணப்பையை வேண்டுமென்றே இழந்துவிட்டேன் என்று எத்தனையோ பேர் நினைக்கலாம். மூன்று வயது குழந்தையுடன் 17 மாதங்களாக பயணம் செய்யும் நிலையில் இந்த வகையான கவனக்குறைவு இயற்கையாகவே நடக்கிறது", என்று குறிப்பிட்டார். இந்த வீடியோ பிப்ரவரி 2 அன்று பகிரப்பட்டது. இதுவரை 50,000 முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது. மேலும் 3000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பல கமெண்ட்களையும் பெற்றுள்ளது.