Afghanistan Earthquake : ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் பகுதியில் 4.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் பகுதியில் இன்று (ஞாயிற்றுகிழமை ) நள்ளிரவு 2 மணியளவில் 4.3 என்னும் ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து கிழக்கே 273 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டது.
இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் “ நிலநடுக்கம்: 4.3 ரிக்டர் அளவில் இன்று நள்ளிரவு 2 மணியவில் ஏற்பட்டது. 180 கிலோ மீட்டர் ஆழத்தில் ஃபைசாபாத் கிழக்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட அப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.
பிரிட்டனிலும் நிலநடுக்கம்
இதே போன்று இன்று அதிகாலை பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியாவில் நியூ பிரிட்டன் தீவுக்கூட்டம் உள்ளது. நியூ பிரிட்டன் நகரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளிவில் 6.5 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கினியாவின் சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிம்பே நகருக்கு அருகில் உள்ள வாலிண்டி பிளான்டேஷன் ரிசார்ட் என்ற இடத்தில் ஏற்பட்டது. நியூ பிரட்டனில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை. இந்த நிலநடுக்கதால் கட்டடங்கள் குலுங்கியதாகவும், இதனால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒரே நாளில் ஆப்கானிஸ்தான் மற்றும் பிரிட்டனில் ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பீதியடைய வைத்துள்ளது.
மேலும் படிக்க
Watch Video : ரசகுல்லா தேநீர் தெரியுமா? கில்லி புகழ் ஆஷிஷ் வித்யார்த்தி பகிர்ந்த சூப்பர் வீடியோ
13 years of VTV : விண்ணைத்தாண்டி வருவாயாவும், ஜெஸ்ஸியும்... 13 ஆண்டுகளை கடந்தும் வழிந்தோடும் காதல்..