குரங்குகள் குழந்தைகளை தூக்கி செல்வது, அதனால் அந்தக் குழந்தைகள் உயிரிழப்பதும் சமீபகாலமாக அதிகம் நடந்துவருகிறது. அப்படி ஒரு சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நேற்று நடந்திருக்கிறது.


குரங்குகள் கூட்டம் இரண்டு மாத கைக்குழந்தையை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து பிடித்து தண்ணீர் தொட்டியில் வீசிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடந்த இந்த சம்பவத்தால் அந்த ஆண் குழந்தையும் உயிரிழந்தான்.


கிடைத்த தகவல்களின்படி, குழந்தை கேசவ் குமார், மொட்டை மாடியில் உள்ள ஒரு அறையில் தனது பாட்டிக்கு அருகில் தூங்கிக் கொண்டிருந்தான். கதவு திறந்திருந்தது. குரங்குகள் அறைக்குள் நுழைந்து குழந்தையை வெளியே இழுத்தன.


தூக்கத்தில் இருந்து எழுந்த பாட்டி குழந்தையை காணவில்லை என்றதும் அதிர்ச்சியடைந்து அக்கம்பக்கத்தினரிடம் விவரங்களை கூறினார். இதனையடுத்து குழந்தையை குடும்பத்தினரும், உறவினரும், அக்கம்பக்கத்தினரும் தீவிரமாக தேடத் தொடங்கினர். 


அப்போது தண்ணீர் தொட்டியில் கேசவ் குமார் மிதந்து கொண்டிருந்ததை கண்டுபிடித்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கேசவ் குமார் உயிரிழந்துவிட்டான்.


Dolo 650 Twitter Trend: இது மாத்திரையா இல்லை ஜெம்ஸா? ட்விட்டரில் தெறிக்கும் டோலோ 650 மீம்ஸ்..! 


முன்னதாக ஒரு சந்தர்ப்பத்திலும் இதேபோன்று குரங்குகள் தங்கள் குழந்தையை எடுத்துச் செல்ல முயன்றதாகவும், ஆனால் உஷாரான நாங்களும், உறவினர்களும் குரங்குகளின் அந்த முயற்சியை முறியடித்ததாகவும் குழந்தையின் பெற்றோர் தெரிவித்தனர்.


புதுச்சேரியில் ரூ.490 மதிப்பில் 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு ; முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு


ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (எஸ்எச்ஓ) சாந்திநகர் ஓ.பி.சிங் கூறுகையில், "குரங்குகள் தொல்லை பெரிய பிரச்னையாக உள்ளது, தேவையான நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்துவருகிறோம்" என்றார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Siddharth Tweet | சாய்னா நேவாலை குறித்து சித்தார்த் பதிந்த மோசமான ட்வீட்.. வலுக்கும் கண்டனங்கள்..


அறிவிக்கப்படும் எண்ணிக்கையை விட 7 மடங்கு கொரோனா இறப்பு அதிகம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்


”மனைவியுடன் தனியா வரணும்” : குடும்பத்துடன் தீக்குளித்த தொழிலதிபர்.. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மகன் மீது வலுக்கும் கண்டனங்கள்..