வரும் 12ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரவிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக அவரது பயணாம் ரத்து செய்யப்பட்டது. பிரதமர் நேரில் வர இயலாத நிலையில் காணொலி முறையில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்வுகளில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளன.


தமிழ்நாட்டில் ஜனவரி 12ஆம் தேதி 11 மருத்துவ கல்லூரிகளை பிரதமர் காணொலியில் திறந்து வைக்கிறார் என்று பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. காணொலி மூலம் கல்லூரிகள் திறக்கப்படுவதால் பிரதமரின் தமிழக வருகை ரத்து உறுதியாகியுள்ளது. ரூ.4000 கோடியில் கட்டப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு மத்திய அரசு ரூ.2,145 கோடி வழங்கியுள்ளது.


 






மேலும், சென்னையில் செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்திற்கு புதிய கட்டடத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். செம்மொழி தமிழாய்வு நிறுவனம் தற்போது  சென்னை தரமணியில் தற்காலிக கட்டடத்தில் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


 






முன்னதாக, மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவிருந்த பொங்கல் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். மதுரையில் ஜனவரி 12ஆஅம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக சார்பில் பொங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  கொரோனா, ஒமிக்ரான் அதிகரிப்பு காரணமாக இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறினார். மேலும், புதுச்சேரியில் பிரதமர் மோடி பங்கேற்கவிருந்த விழாவும் ரத்து செய்யப்பட்டதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண