நடிப்பதற்கு ஆடிஷன்.. மயக்க மருந்து கொடுத்து நிர்வாண வீடியோ - பெண் மாடல் கொடுத்த பகீர் புகார்!

லக்னோ: நடிப்பதற்கு வாய்ப்பளித்தாக கூறி பெண் மாடல் ஒருவரை ஆபாசமாக படமெடுத்து மிரட்டிய கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

Continues below advertisement

உத்தரப் பிரதேசத்தில் பெண் மாடல் ஒருவருக்கு பெண் மற்றும் அவரது கூட்டாளிகள் மயக்க மருந்து கலந்த பானங்கள் கொடுத்து நிர்வாணமாக படம் பிடித்தனர். பின்னர் அவரை மிரட்டி, 5 லட்சம் ரூபாய் கொடுக்காவிட்டால் வீடியோவை இணையத்தில் பதிவேற்றுவோம் என மிரட்டியுள்ளனர். விபூதி காந்த் காவல் நிலையப் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் இந்தச் சம்பவம் நடந்தது.

Continues below advertisement

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தனது வீடியோவை வெவ்வேறு சமூக வலைதளங்களில் பதிவேற்றியதாகவும், அதை நீக்குவதற்கு ரூ.5 லட்சம் தருமாறு தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் அந்தப் பெண் சனிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

பெண் அளித்த புகாரில், வைஷ்ணவி பிலிம் புரொடக்‌ஷனில் பணிபுரிய தியா வர்மா என்பவரை தொடர்புகொண்டதாகவும், மாடலிங் மற்றும் படங்களில் நடிப்பதாக உறுதியளித்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறினார். 


மேலும், அனூப் ஓஜா, வருண் திவாரி, ஆயுஷ் மிஸ்ரா, பிரியா மிஸ்ரா மற்றும் சந்தீப் விஸ்வகர்மா ஆகியோருக்கு தியா அறிமுகப்படுத்தினார். விருந்தினர் மாளிகையில் அவர்கள் சில மயக்கமருந்துகள் கலந்த குளிர்பானங்களை வழங்கினர். அதன் பின்னர் ஒரு ஆடையை வழங்கி அணிந்துகொள்ளுமாறு கூறினர். 

நான் உடை மாற்றும் போது அவர்கள் என்னை நிர்வாணமாக படம் பிடித்து சிறிதுநேரம் கழித்து அந்த வீடியோவை தன்னிடம் காண்பித்தனர். மேலும் என்னை ஆபாச படத்தில் நடிக்க வலியுறுத்தினார்கள். அப்படி நடிக்கவில்லை என்றால் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றுவோம் என்றார்கள். 

இருந்தாலும் நான் அவர்களுடைய மிரட்டலுக்கு அடிபணியவில்லை. அதுமட்டுமின்றி வீடியோவை அழிக்கும்படி கூறியதற்கு 5 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கவில்லை என்றால் நிர்வாண வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவோம் என மிரட்டினார்கள் என்று புகார் அளித்துள்ளார்,

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது மிரட்டி பணம் பறித்தல், தகவல் மற்றும் தொழில்நுட்ப சட்டம் மற்றும் ஐபிசியின் பிற பிரிவுகளின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றனர்.

உத்தரப் பிரதேசத்தில் பெண்களின் பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கும் தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்தவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண  

மேலும் வாசிக்க: Ind vs Pak, T20 World Cup: எல்லோரும் ரெடியா....இன்னும் சில மணிநேரங்களே...இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்..!

Continues below advertisement
Sponsored Links by Taboola