உத்தரப்பிரதேசத்தில் ஆதார் கார்டு பெயர் சிக்கலால் சிறுமிக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆதாரில் சிறுமியின் பெயர் இடம்பெற வேண்டிய இடத்தில் ’மதுவின் ஐந்தாவது மகள்’ என இடம்பெற்றிருந்ததே இந்த சிக்கலுக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்துக்குடிமக்களுக்கும் முக்கிய ஆவணங்களில் ஒன்றாக ஆதார் விளங்கிவருகிறது. ஆதாரில் குடிமக்களின் புகைப்படம், முகவரி, கைரேகை போன்றவை இருப்பதால், இதனை அனைத்து அரசு நலத்திட்டங்களைப் பெறுவதற்கு நாம் உபயோகித்துவருகிறோம். குறிப்பாக வங்கி கணக்கு துவங்குவது, கேஸ் சிலிண்டர் பெறுவது, தடுப்பூசி செலுத்துவதற்குப் போன்ற அனைத்திற்கும் ஆதாரினை நாம் தற்போது பயன்படுத்திவருகிறோம். இந்நிலையில் ஆதார் சிக்கலால் சிறுமிக்கு பள்ளியில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் உபியில் அரங்கேறியுள்ளது.
மெட்ரோ ஸ்டேஷனில் இருந்து நடுரோட்டில் குதித்து உயிரை மாய்த்த இளம்பெண்.. பதைபதைத்த மக்கள்..
நடந்தது என்ன?
உத்தரப்பிரதேசம் மாவட்டம் ராய்பூர் கிராமத்தைச் சேர்ந்த தினேஷ், தனது மகள் ஆர்த்தியை பள்ளியில் சேர்க்கச் சென்றார். ஆர்த்தியின் ஆதார் அட்டையில், அவரது பெயர் ‘மது கா பஞ்ச்வா பச்சா’ (மதுவின் ஐந்தாவது குழந்தை) என எழுதப்பட்டிருந்ததால், பள்ளி நிர்வாகம் அவளை சேர்க்கவில்லை. இந்த விவகாரம் முதலமைச்சருக்கு எட்டியபோது, சிறுமியை உடனடியாக பள்ளியில் சேர்க்குமாறு அடிப்படைக் கல்வித் துறைக்கு அவர் உத்தரவிட்டார்.
இது தொடர்பாக முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில், '' சிறுமியை உடனடியாக பள்ளியில் சேர்க்க வேண்டும்.அவரது பெற்றோரின் பாதுகாவலராக குறிப்பிட வேண்டும். அதேபோல ஆதாரில் உள்ள பிழையும் உடனடியாக திருத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து தெரிவித்த அந்த குழந்தையின் அம்மா, '' நான் எனது மகளை அரசுபள்ளியில் சேர்ந்தச் சென்றேன்.அவர்கள் ஆதார் கார்டு கேட்டார்கள். ஆனால் ஆதார் கார்டை பார்த்ததும் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடையவும் சிரிக்கவும் செய்தனர். அந்த ஆதாரில் குழந்தையின் பெயருக்கு பதிலாக மதுவின் ஐந்தாவது குழந்தை என பதிவிட்டிருந்தது என்றார்.
அரசு தலையிட்ட நிலையில் ஏப்ரல் 2ம் தேதி அந்த சிறுமி பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ஆதாரில் பிழையாக உள்ள சிறுமியின் பெயரை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்