தெலங்கானா மாநிலம் ஹைதாராபாத்தில் பெண் ஒருவர் மெட்ரோ ஸ்டேஷன் கட்டிடத்தில் இருந்து நடு ரோட்டில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
உயிரிழந்த பெண் சாபானா என தெரியவந்துள்ளது. ஸ்ரீராம் நகரைச் சேர்ந்த அப்பெண் திடீரென ESI மெட்ரோ ஸ்டேஷனுக்குச் சென்று பக்கவாட்டு சுவரில் ஏறி நின்றார். அவர் தற்கொலைக்குத்தான் முயற்சி செய்கிறார் என்பதை உணர்ந்த அங்கிருந்தவர்கள் அந்தப்பெண்ணை தடுக்க முயற்சி செய்தனர்.
யார் சொல்வதையும் காதில் வாங்காத அப்பெண் நடுரோட்டில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். உடனடியாக அப்பெண்ணை மீட்டு அருகில் உள்ள காந்தி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அப்பெண் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், இந்த தற்கொலை காதல் விவகாரத்தால் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். அப்பெண் காதலித்து வந்ததாகவும் அவரது காதல் விவகாரத்தை அவரது குடும்பத்தினர் ஏற்காததால் ஏமாற்றம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள SR நகர் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்