உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் 28 வயது நபர் ஒருவர் தனது ஆடு பக்கது வீட்டிற்கு சென்று சில பொருட்களை சேதப்படுத்தியதால், பக்கத்து வீட்டில் இருக்கும் நபர் ஆத்திரமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


பிறப்புறுப்பில் கடி:


வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரும் சண்டை போட்டுக்கொண்டனர். இந்த சம்பவம் ஷாஜஹான்பூரின் ரோஜா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்துள்ளது.  இந்த சண்டையின் போது 31 வயது கங்காராம் சிங், ஆட்டு உரிமையாளரின் பிறப்புறுப்பை கடித்துள்ளார்.  அவர் கடித்ததில் அந்த இளைஞர் சுயநினைவை இழந்து மயங்கி விழுந்தார். பின் அங்கிருந்து அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சிலர் அழைத்துச் சென்று அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


4 தையல்கள்:


பாதிக்கப்பட்ட நபரின் பிறப்புறுப்பின் 4 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில், “ எனது ஆடு கங்காராம் வீட்டில் தவறுதலாக நுழைந்து சில பொருட்களை சேதப்படுதியதன் காரணமாக அவர் என்னுடன் கடுமையாக நட்ந்துகொண்டார். அப்போது என்னை கீழே தள்ளிவிட்டு எனது பிறப்புறுப்பை கடித்தார். இதனால் நான் மயங்கி விழுந்தேன்.


இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற போது போலீசார் முதலில் புகாரை பதிவு செய்ய மறுத்தனர்” என கூறியுள்ளார். மேலும் அவர் கடுமையான வலியில் இருப்பதாகவும், இந்த சம்பவத்தை தொடர் அவரின் தாம்பத்திய வாழ்க்கை பாதிக்கப்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


இல்லற வாழ்க்கைக்கு பாதிப்பா?


இருப்பினும் மருத்துவர்கள் கூறுகையில், இந்த காயம் வெளிப்புறத்தில் தான் ஏற்பட்டுள்ளது, நான்கு தையல்கள் போடப்பட்டுள்ளது, அவரின் உயிர் நாடிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, அவரின் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரோஜா காவல் நிலைய அதிகாரி அமித் பாண்டே கூறுகையில், “ பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது விரைவில் அவர் குணமடைந்து வீடு திரும்புவார். அவரின் இல்லற வாழ்க்கைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இந்த சம்பவம் தொடர்பாக கங்காராம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். மருத்துவ அறிக்கையை பரிசீலித்த போலீசார், கங்காராம் மீது ஐபிசி பிரிவு 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 504 (வேண்டுமென்றே அவமதித்தல்) மற்றும் 506 (குற்ற ரீதியாக மிரட்டுவது) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  


Chandrayaan 3: நிலவில் அரிதான கனிமம்.. உறுதி செய்த சந்திரயான் 3.. பிரக்யான் ரோவரின் அடுத்த டார்கெட் இதுதான்..!


LPG Cylinder Price: அமலுக்கு வந்தது சிலிண்டர் விலை குறைப்பு.. பிரதமர் மோடி கொடுத்த ரியாக்‌ஷனை பாருங்க..!