UP Election Result 2022 LIVE: உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வெற்றி
UP Election Result 2022 LIVE updates: உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் இங்கு தெரிந்து கொள்ளலாம்
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்றார்.
உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், கோவா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவில் பாஜக முன்னிலையில் உள்ள நிலையில், இன்று மாலை டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு பிரதமர் நரேந்திரமோடி வருகிறார்.
உத்தரப்பிரதேச மாநில பாஜக தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா சிராத்து தொகுதியில் பின்னடவை சந்தித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் தற்போதைய நிலவரத்தின்படி சமாஜ்வாதி கட்சி 112 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பாஜக 259 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக அக்கட்சியின் எம்பி ஹேமமாலினி,”உத்தரப்பிரதேசத்தில் நாங்கள் மீண்டும் ஆட்சியமைப்போம் என்று எங்களுக்கு தெரியும். ஏனென்றால் நாங்கள் எல்லா இடங்களில் வளர்ச்சிக்கு பாடுப்பட்டுள்ளோம். அதனால் தான் மக்களை எங்களை நம்புகின்றனர்”எனத் தெரிவித்துள்ளார்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் முடிவுகள் 12 மணி நிலவரம்:
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் அனைவரும் வளர்ச்சிக்கு வாக்களித்துள்ளனர் என்று அம்மாநில பாஜக தலைவர் ஸ்வதந்திரா சிங் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் முன்னிலை வகித்து வருகிறார்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக 230 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் மீண்டும் அங்கு பாஜக அரசு அமையும் சூழல் உருவாகியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய பலமான ரேபரேலி தொகுதியில் முதல் சுற்றின் முடிவில் பாஜகவின் வேட்பாளர் அதிதி சிங் முன்னிலை பெற்றுள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவிற்கு மாறியவர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஜஸ்வந்த்நகர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட சிவ்பால் சிங் யாதவ் பின் தங்கியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கார்கல் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் முன்னிலை பெற்றுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 200 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்.
ரேபரேலி தொகுதியில் பாஜகவின் வேட்பாளர் அதிதி சிங் முன்னிலை பெற்றுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் வாக்கு எண்ணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உத்தரப்பிரதேசத்தில் தற்போதைய முன்னிலை நிலவரம்:
உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் முன்னிலை பெற்றுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மற்றும் அயோத்தியில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.
5 மாநில தேர்தலில் வாக்கு எண்ணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய முன்னிலை நிலவரம்
உத்தரப்பிரதேசத்தில் பாஜக 116 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அதேபோல், சமாஜ்வாதி கட்சி 69 இடங்களிலும், பகுஜன் சமாஜ்வாதி 3, காங்கிரஸ் 3 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
403 இடங்களை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் முதற்கட்ட வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி 100 இடங்களுக்கு மேல் பாஜக முன்னிலை வகித்து வருகின்றது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக 16 இடங்களிலும் சமாஜ்வாதி கூட்டணி 5 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் வேட்பாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து லக்னோவின் சரோஜினி பகுதி வேட்பாளர் ராஜேஷ்வர் சிங்,”மக்களுக்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவரும் மீதும் அதிக நம்பிக்கை உள்ளது. ஆகவே இந்த முறையும் நாங்கள் தான் அதிக இடங்களை கைப்பற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று பாஜக தலைவரும் அமைச்சருமான ப்ரஜேஷ் பதக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “உத்தரப்பிரதேசத்தில் மக்கள் சமாஜ்வாதி கட்சியை நிரகாரித்துள்ளனர். இந்த முறையும் பாஜக இங்கு ஆட்சியை பிடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில், அங்கு 3 அடக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய ஏபிபி-சி வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பின்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 4 முதல் 8 இடங்கள் வரை பெற வாய்ப்பு உள்ளது. அதேபோல் பாஜக 228 முதல் 244 இடங்கள் வரை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது. சமாஜ்வாதி கட்சி 132 முதல் 148 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சி 13 முதல் 21 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. சுயேட்சைகள் 2 முதல் 6 இடங்கள் வரையும் பிடிக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இதை வைத்து பார்க்கும் போது பாஜகவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது
உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
Background
UP Election Result 2022 LIVE Updates:
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் கோவா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட உள்ளன. உத்தரப்பிரதேசத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -