புதுச்சேரி மாநிலத்தில் ஜனவரி 1 இன்று முதல் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
அமலுக்கு வந்த விலை உயர்வு:
புதுச்சேரி அரசானது, அரசின் வருவாயைப் பெருக்கும் நோக்கிலும், புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய மாநிலங்களுக்கு இடையே உள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை வேறுபாட்டை குறைக்கவும், 27-12-2024 தேதியிட்ட அரசாணை எண் 15 இன் படி புதுச்சேரி மதிப்பு கூட்டப்பட்ட வரிச் சட்டம் (VAT), 2007ன் கீழ் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு திருத்தப்பட்ட வரி விகிதங்களை அறிவித்துள்ளது. இந்த திருத்தப்பட்ட வரி விகிதங்கள் 01.01.2025 இன்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.
இதையும் படிங்க: UP Murder: கழுத்தில் பிளேட், உணவில் விஷம் - 4 தங்கைகள், தாயை கொடூரமாக கொன்ற இளைஞர் - தந்தை எங்கே?
திருத்தத்திற்குப் பிறகு, புதுச்சேரிக்கும் அண்டை மாநிலங்களுக்கும் இடையே உள்ள விலை வேறுபாடு பின்வருமாறு:-
புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை (வாட்) வரும் ஜனவரி 1ந் தேதி முதல் அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை உயர்த்த கவர்னர்கைலாஷ்நாதன் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி பெட்ரோல் வரி 2.44 சதவீதமும், டீசல் 2.57 சதவீதமும் உயர்கிறது. இந்த உயர்வு புதுச்சேரி, காரைக்கால், மாகி,ஏனாம் என 4 பிரதேசங்களிலும் அமலாகிறது.
தற்போது, புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.94.26, காரைக்காலில் ரூ.94.03, மாகியில் ரூ.91.92, ஏனாமில் ரூ.94.92 ஆக உள்ளது. டீசல் விலை புதுச்சேரியில் ரூ.84.48, காரைக்காலில் ரூ.84.35, மாகேவி ரூ.81.90, ஏனாமில் ரூ.84.75 ஆக உள்ளது.
இதையும் படிங்க: Pongal Parisu 2025: மக்களே! பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் வாங்க ரெடியா? எப்போ தர்றாங்க?
வாட் வரி உயர்வால் பெட்ரோல், டீசல் விலை ரூ.2 வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. புதுச்சேரி அரசின் வருவாயை உயர்த்தும் நோக்கில் இந்த வாட் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும் அண்டை மாநிலங்களை விட புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை குறைவாகவே இருக்கும்.