கர்நாடகாவின் கனககிரி பாஜக எம்எல்ஏ பசவராஜ் ததேசுகூரின் மகன் தனது விலை உயர்ந்த ஐபோன் மூலம் பிறந்தநாள் கேக்குகளை வெட்டும் வீடியோ கிளிப் உள்ளூர் மக்களிடமிருந்தும் நெட்டிசன்களிடமிருந்தும் பெரும் விமர்சனத்துக்குள்ளானது.


எம்எல்ஏ பசவராஜ் ததேசுகூரின் இரண்டாவது மகன் சுரேஷ் ததேசுகூர் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எட்டு கேக்குகளை ஐபோன் மூலம் வெட்டிய வீடியோ கிளிப்புகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கனககிரி மற்றும் கரட்டகியில் இருந்து சுரேஷ் தனது நண்பர்களை தனது BMW 520D சொகுசு காரில் உல்லாச பயணத்திற்காக அழைத்துச் சென்று ஹோசாப்பேட்டையில் அடையாளம் தெரியாத இடத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.



"இது பணத் திமிரை காட்டும் அசிங்கமான செயல். உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் ஆபத்தில் இருக்கும்போது, ​​பலர் கால் வயிற்று உணவுக்காக போராடுகிறார்கள், எம்எல்ஏ குடும்பத்தினர் ஆடம்பரமாக பணக்காரத்தனத்தை வெளிப்படுத்துவது தொகுதியில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய வகுப்புகளை அவமதிப்பதாகும்" என்று காங்கிரஸ் தலைவர்கள் புகார் கூறினர்.


எதற்கெடுத்தாலும் கூகுள் டாக்டரை தேடுபவரா... ஆபத்து... அலர்ட்!


இதற்கிடையில், எம்எல்ஏ பசவராஜ் ததேசுகூர் தனது மகனின் செயலை நியாயப்படுத்தும் விதமாக, "அதில் என்ன தவறு? கோவிட் -19 தொற்றுநோய் இன்னும் நீடிப்பதால் கைகளுக்கு பதிலாக என் மகன் தனது ஐபோனை கேக் வெட்ட பயன்படுத்தினார். அவர் உழைத்து சம்பாதித்த பணத்தில் தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். " என்று  கூறினார்.



இரண்டு முறை சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, தேர்தலில் போட்டியிட பணம் இல்லை என்று கூறி ததேசுகூர் அனுதாப ஓட்டுகளை கேட்டு வாங்கினார். அதை தொடர்ந்து தொகுதி மக்கள் தாராளமாக நன்கொடைகளை வழங்கினர். பின்பு 2018 தேர்தலில் அதனை பயன்படுத்தி வென்று எம்.எல்.ஏ ஆனார். எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ததேசுகூர் விலையுயர்ந்த கார்களை வாங்கினார் மற்றும் அவரது தொகுதி மக்களின் நலனில் சிறிதும் அக்கறை காட்டவில்லை என்று ஒரு சில உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டினர். தற்போது இது போன்ற காரியங்களுக்காக தன் மகனை ஞாயப்படுத்துவது சரியில்லை என்றும் குறிப்பிட்டனர்.


ததேசுகூரின் மூத்த மகன் சமீபத்தில் தொகுதியில் உள்ள பஞ்சாயத்துகளில் அதிகாரிகள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். பிற்காலத்தில் இவர்களும் அரசியலுக்கு வரும் வாய்ப்புள்ளது என்பதால், இவர்கள் குறித்த பயம் இப்போதே தொகுத்து மக்களுக்கு தொற்றிக்கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.


Pimples Cure Tips: முகமெல்லாம் பருவா...? இதை செய்தால் பரு உரு தெரியாமல் போகும்!