இன்று ஒரு சின்ன தலை  வலி வந்தால் கூட கூகிள் டாக்டர் உதவியை நாடுகிறோம்.  இந்த டெக்னாலஜி குறைவாக இருந்த காலத்தில் ஏதேனும் தொந்தரவு வந்தால் , மருந்து கடைகளுக்கு சென்று தனக்கு இருக்கும் பிரச்சனைகளை சொல்லி மருந்து வாங்கி சாப்பிடும் பழக்கம்  இருந்தது. இப்போது அது கூகிள் உதவியுடன் தொடர்கிறது. இது இரண்டுமே நோயின் தீவிரத்தை அதிகமாக்கும். மிகவும் தவறான முறை.




சாதாரண டென்ஷன் டைப் தலைவலியாக இருக்கும். கூகிள் நீங்கள் தலை வலி என்று தேடினால் அது புற்றுநோயாக கூட இருக்கலாம் என்று .சொல்லும். இதனால் தேவை இல்லாத மனஅழுத்தம், குழப்பம் போன்றவை வரும்.  நீங்கள் பல வற்றை கூகிள் வழியாக கற்றுக்கொள்ளலாம். ஆனால் மருத்துவத்தை அதில் இருந்து பின்பற்ற கூடாது. அப்டியே தொடர்ந்து செய்தால் அது நோய்கள் வருவதற்கு காரணமாக இருக்கும்.


தனக்கு என்ன எல்லாம் அறிகுறிகள் இருக்கிறது என்பதை கூகிள் செய்து பார்த்து , மருந்துகளையும் அதில் தேடி தெரிந்து  கொள்ளலாம்.ஆனால் அது மிகவும் ஆபத்தாக  முடியும். இது  பக்க விளைவுகளையும், நோய் ஆரம்பத்தில் குறைவாக இருப்பது போன்று இருக்கும். ஆனால் நாளடைவில் இது தீவிரமாகும்.




இது மிக சாதாரணமாக வலிகளுக்கு சுயமாக மருந்துகளை  எடுக்க தொடங்கி, கிட்ட தட்ட அனைத்து வியாதிகளுக்கும் சுய மருத்துவம் எடுத்து கொள்ளும் சூழல் உருவாகி உள்ளது.


ஒவ்வொரு  மருத்துவரும்,நோயாளியின்  வயது,பாலினம், செய்யும் வேலை, அறிகுறிகள்,  ஆரம்ப நிலை, தீவிர  தன்மை, நோய் கிருமிகள் தன்மை, இரத்த பரிசோதனைகள், உறுப்புக்கள் வேலை செய்யும் விதம்  என பல்வேறு காரணிகளை வைத்து மருந்துகளை பரிந்துரை செய்வார்கள்.  இது அனைத்தையும் வைத்து எத்தனை நாட்களுக்கு மருந்துகளை எடுத்து கொள்ள வேண்டும் , எப்படி சாப்பிட வேண்டும், மருந்துகள் எடுத்து கொள்ளும் போது என்ன மாதிரியான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். இது போன்று பல்வேறு விஷங்கள் ஒரு நோயை சரி  செய்வதிலும்,நோயாளியை குணப்படுத்துவதில்  அடங்கி உள்ளது.




ஆனால் கூகிள் இந்த நோய்க்கு இந்த மருந்து எடுத்து கொள்ளலாம் என்ற பரிந்துரை மட்டும் செய்யும். நோய்கள் அனைத்து நோயாளிகளுக்கும் ஒரே மாதிரியாக இருப்பது  இல்லை.




உணவு ஆலோசனை, உடற்பயிற்சி , மருந்துகள், ஊசிகள் என ஏதுவாக  இருந்தாலும்,மருத்துவரின் ஆலோசனையின் பேரிலும்,  அந்த துறை  சார்ந்த வல்லுனர்களிடம் மட்டும் எடுத்து கொள்ள வேண்டும். தானாக டயட் எடுத்து கொள்வது கூட  ரிசல்ட் தராது. அதனால் கூகிள் இடம் இருந்து  தகல்வல்களை தெரிந்து கொள்ளுங்கள். அதையே பின்பற்ற வேண்டாம். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் கூகுளை டாக்டர் ஆலோசனை வேண்டாம்.