கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு ( பிப்.17 ) சிவசேனா கட்சியின் சின்னத்தை ஏக்நாத் சிண்டே தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இது உத்தவ் தாக்கரே தரப்புக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது.


இதையடுத்து, தேர்தல் ஆணையம் முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே தரப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையானது, நாளை விசாரணைக்கு வருவதாக உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். 


என்னிடம் இருந்து அனைத்தும் திருடப்பட்டு விட்டது. கட்சி திருடப்பட்டது, சின்னம் திருடப்பட்டுவிட்டது , ஆனால்  தாக்கரே பெயரை திருட முடியாது என்றும் இந்திய தேர்தல் ஆணைய குழுவை கலைக்க வேண்டும் என்றும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.


பிரிந்த சிவசேனா:


சிவசேனா கட்சி தலைமைக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகம் ஏற்படுத்தியதையடுத்து, கட்சி இரண்டாக பிரிந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி என்றும் ஏக்நாத் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி என்றும் இரண்டாக பிரிந்தது.


கட்சியின் பெரும்பாலான எம்.எல்,ஏ.க்களின் உதவியாலும், பாஜகவுடனான கூட்டணியாலும் ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதலமைச்சர் பதவி கிடைத்தது.


கட்சியின் வில் மற்றும் அம்பு சின்னத்திற்காக இரு பிரிவும் போட்டி போட்டுவந்த நிலையில், உண்மையான சிவசேனா யார்? கட்சியின் சின்னம் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு மனுக்கள் சமர்பிக்கப்பட்டன.


உச்சநீதிமன்றத்தில் முறையீடு:


இரண்டு அணிகளாக பிரிந்ததையடுத்து, வில் - அம்பு சின்னத்தை பயன்படுத்த கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடைக்காலத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.


அதையடுத்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவுதான் சட்டப்பூர்வ சிவசேனா என்று இந்திய தேர்தல் ஆணையம் பிப்ரவரி 17 ஆம் தேதி அறிவித்துள்ளது. உத்தவ் தாக்கரே தலையிலான சிவசேனா தரப்புக்கு, தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதையடுத்து, தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து, உத்தவ் தாக்கரே தலைமையிலான தரப்பு , உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நாளைக்கு வரவுள்ளது.


Also Read: ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி மீண்டும் கைது.. தெலுங்கானாவில் நடந்தது என்ன? முழு விவரம்..


Also Read: தாய் கழகம் என்ற அடிப்படையில் அதிமுகவை சரியான பாதையில் கொண்டு செல்வது எங்கள் கடமை - கி.வீரமணி