ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் கசோதரி ஷர்மிலா மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானாவில் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தலைமையிலான பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆந்திரப் பிரதேசத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான YSR காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. YSR கட்சி தலைவரும், ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியுமான YS ஷர்மிளா தெலுங்கானாவில் உள்ள சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சிக்கு எதிராக விமர்சனத்தை முன்வைத்து பல போராட்டங்கள் நடத்தி வருகிறார்.
இதற்காக மாநிலத்தில் பல பகுதிகளுக்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இதற்காக அவர் மாநிலம் முழுவதும் நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் கடந்த மாதம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார். அப்போது காரில் இருந்து இறங்க மறுத்ததால் காரோடு அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் நேற்று மகபூபாபாத்தில் நடைப்பயணம் மேற்கொண்டார். அவரது கட்சி சார்பில் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது. இதனிடையே அவரை வரவேற்க YSR கட்சி தரப்பில் வைக்கப்பட்டிருந்த பேனர் ஆளும் கட்சியினரால் சேதப்படுத்தப்பட்டது. இதனால் இரு கட்சியினர் இடையே மோதல் வெடித்தது. தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படுவதால் ஷர்மிலாவின் பாத யாத்திரைக்கு போலீசார் தடை விதித்தனர். இந்த சம்பவம் குறித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இதனை ஏற்காத ஷர்மிலா மீண்டும் நடைப்பயணம் மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார். அதே சமயம், மஹபூபாபாத் எம்எல்ஏ ஷங்கர் நாயக்கிற்கு எதிராக தகாத கருத்துக்களை தெரிவித்ததாக ஒய்எஸ்ஆர்டிபி தலைவர் ஒய்எஸ் ஷர்மிளா மீது மஹபூபாபாத் டவுன் PS இல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மஹபூபாபாத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை தவிர்க்க ஹைதராபாத் மாற்றப்பட்டுள்ளார். 504 IPC, 3(1)r SC ST POA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மீண்டும் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி கைதான சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.