நடப்பு புதுச்சேரி சட்டப்பேரவை உறுப்பினர்கள் 33 பேரில் பேரவைத் தலைவர் உட்பட 16 பேர் புதிய முகங்கள். டெல்லியில் நாடாளுமன்றத் தலைவர் ஓம் பிர்லாவிடம், புதுவை எம்எல்ஏக்களுக்கு சட்டமன்றச் செயல்பாடுகள், நிர்வாகம் ஆகியவை குறித்த பயிற்சி அளிக்க வேண்டும் எனப் பேரவைத் தலைவர் செல்வம் கேட்டுக்கொண்டார். இதன்படி இன்று முதல் 3 நாட்களுக்கு நாடாளுமன்றத்தில் புதுவை எம்எல்ஏக்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் மூத்த எம்எல்ஏக்களும், அமைச்சர்களும் பங்கேற்க டெல்லி சென்றனர். இதில் மொத்தம் 24 எம்.எல்.ஏக்கள் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள கருத்தரங்கு அறையில் புதுவை எம்எல்ஏக்களுக்குப் பயிற்சி தொடங்கி நடந்து வருகிறது. நாடாளுமன்றத் தலைவர் ஓம் பிர்லா  எம்.எல்.ஏக்களுக்கான பயிற்சியை தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்தார்.



அதையடுத்து புதுச்சேரி சட்டப் பேரவைத் தலைவர் செல்வம் பேசுகையில், சமீபத்திய ஆண்டுகளில், புதுச்சேரி சட்டப் பேரவையில் ஏற்படும் இடையூறுகள் மிகவும் கவலைக்குரியவை. புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலகம், எந்தவொரு நிர்வாகத் திட்டத்திற்கும் அனுமதி அல்லது ஒப்புதலுக்காக  அமைச்சரவைத் துறையைச் சார்ந்திருப்பதை நான் கவனித்தேன். தற்போதைய நிதி அதிகாரப் பகிர்வுத் திட்டத்தின்படி, சட்டப்பேரவைச் செயலகத்திற்குப் போதுமான பட்ஜெட் ஒதுக்கீடுகள் செய்யப்பட்டாலும், ஒவ்வொரு முறையும், செலவின அனுமதி கோரும் முன்மொழிவுகள் நிதித்துறைக்கு அனுமதி அல்லது ஒப்புதலுக்காக அனுப்பப்படுகிறது.


புதுச்சேரி சட்டப்பேரவைச் செயலகத்தில் 136 அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 93 பணியிடங்கள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளால் அயல் பணியாக நிரப்பப்படுகின்றன. புதுச்சேரி சட்டப்பேரவைக்கு அரசு நிர்வாகத்தைக் கண்காணிக்கும் அதிகாரமும் பொறுப்பும் இருப்பதால், புதுச்சேரி பேரவைத் தலைவர், சட்டப்பேரவைச் செயலகத்தின் பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளின் நியமனம், ஒழுங்கு அம்சங்கள் உள்ளிட்ட நிதி மற்றும் நிர்வாக விஷயங்களில் சுயாட்சி பெற்றவராக இருத்தல் வேண்டும் என்று வலியுறுத்தினார்.


காலையில் பயிற்சி முடிந்தவுடன் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள நூலகத்தை எம்எல்ஏக்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து பிற்பகல் மீண்டும் பயிற்சி அளிக்கப்பட்டது. வரும் 16-ம் தேதி வரை நடைபெறும் பயிற்சியை முடித்துவிட்டுப் புதுவைக்குத் திரும்புகின்றனர்.


மேலும் படிக்க...


Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..


இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..


Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?


Mental Health | தினமும் Exercise பண்ணுவீங்களா? உங்க மனநலன் பத்தி ஆய்வு சொல்வது என்ன தெரியுமா? ஹெல்த் முக்கியம் பாஸ்..


முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!


Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..


மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண