6 மாதங்களில் குழந்தைகளுக்கான நோவாவாக்ஸ் கொரோனா தடுப்பூசியை அறிமுகப்படுத்த இந்தியாவின் சீரம் நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. இதனை சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா தெரிவித்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவரும் நிலையில் தற்போது இந்தியாவிலும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர் கோவாவாக்ஸ் என்று அழைக்கப்படும் நோவாவாக்ஸ் தடுப்பூசி மூன்று வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளின் சோதனைகளில் நல்ல முடிவுகளைக் காட்டியுள்ளது என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த மெய்நிகர் மாநாட்டில் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “6 மாதத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசி அறிமுகம் செய்யப்படும். நோவாவாக்ஸ் தடுப்பூசி மூன்று வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு சோதனைகளில் நல்ல முடிவை கொடுத்துள்ளது.
நோவாவாக்ஸ் தடுப்பூசி ஏற்கெனவே இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதைத்தவிர, அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஸ்புட்னிக் போன்ற தடுப்பூசிகளையும் இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது.
சீரம் நிறுவனத்தின் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் மாதாந்திர வெளியீடு நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. அதாவது ஏப்ரல் முதல் 250 மில்லியன் டோஸ்களாக அதிகரித்துள்ளது. ஆனால் தேவை குறைவாக உள்ளதன் காரணமாக அந்த உற்பத்தியை தற்காலிகமாக பாதியாக குறைக்கும் திட்டத்தை சீரம் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்தியா உட்பட உலகளவில், தேவையை விட தடுப்பூசிகள் விநியோகம் அதிகமாக உள்ளது. சில நாடுகளில் 10% அல்லது 15% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. உண்மையில் 60 - 70% மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
சன் டிவி ஓனரு.. ஜெயலலிதா சொந்தக்காரர்.. ஜாக்குலினை சுகேஷ் நெருங்கியது எப்படி?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்