மத்திய அரசின் கொள்கைள் தொடர்பாக மத்திய தொழிற்சங்கங்கள் நேற்று ஆலோசனை நடத்தின. இது தொடர்பான கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி மத்திய அரசின் விவசாயிகள், மக்கள் மற்றும் பணியாளர் ஆகியோருக்கு எதிரான கொள்கைகளை கண்டித்து இந்த தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளன. 


 


அதன்படி வரும் 28 மற்றும் 29ஆம் தேதிகளில் நாடு முழுவதும் உள்ள இந்த தொழிற்சங்கங்களின் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இந்த வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள், காப்பீட்டு துறை ஊழியர்கள்  பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் சாலை போக்குவரத்து, மின்சார ஊழியர்கள் சங்கங்களும் இதில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


 


இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக எஃகு, எண்ணெய், தொலைத்தொடர்பு, தபால், வருமான வரித்துறை உள்ளிட்ட துறைகளின் ஊழியர்கள் நோட்டீஸ் அளித்துள்ளனர். மேலும் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு ரயில்வே மற்றும் பாதுக்கப்புத்துறையிலுள்ள ஊழியர்கள் சங்கம் ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. 


 


இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் ஈபிஎஃப் வட்டி விகிதம் 8.5லிருந்து 8.1ஆக குறைப்பு, பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அத்துடன் நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம் தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த மத்திய தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்ததிற்கு அனைத்து அமைப்புகளிடமும் ஆதரவு கோரியுள்ளது. மக்களை காப்பாற்றுங்கள், நாட்டை காப்பாற்றுங்கள் என்ற முழக்கத்துடன் இந்தச் சங்கங்கள் தங்களுடைய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கோரி வருகின்றன.


இந்த வேலை நிறுத்தத்தில் INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF and UTUC போன்ற தொழிற்சங்கங்கள் பங்கேற்க உள்ளன. மேலும் வரும் மார்ச் 24ஆம் தேதி ஃபேஸ்புக் தளம் மூலம் நாடு முழுவதும் உள்ள மத்திய தொழிற்சங்கங்களின் ஊழியர்கள் கூட்டம் நடைபெறும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.




மேலும் படிக்க:இந்திய ரயில்வேயில் 1.49 லட்ச காலிப்பணியிடங்கள்- மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண