உத்தரப்பிரதேசம்,சத்தீஸ்கர்,உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு மீண்டும் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 


 


இந்நிலையில் உத்தரப்பிரதேச தேர்தலில் வேறு கட்சிக்கு வாக்களித்த மனைவியை வீட்டை விட்டு வெளியே அனுப்பியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநில ரேபரேலியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவருக்கு அதேபகுதியைச் சேர்ந்த நபருடன் காதல் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவருக்கும் கடந்த 2021ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்துள்ளது. இவர்கள் இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வந்துள்ளதாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 


 


இந்தச் சூழலில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது தொடர்பான பேச்சு எழுந்துள்ளது. அப்போது இந்த இளம்பெண் தன்னுடைய கணவர் கூறிய கட்சிக்கு பதிலாக மாற்று கட்சிக்கு வாக்களித்தாக தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து ஆத்திரம் அடைந்த கணவர் அந்தப் பெண்ணை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார். அத்துடன் தங்களுடைய திருமண உறவை முறித்து கொள்ள போவதாகவும் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அப்பெண் ஒரு தொண்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு தன்னுடைய கணவர் மிரட்டியதை கூறியுள்ளதாக தெரிகிறது. 


 


அந்த தொண்டு நிறுவனம் தேசிய மகளிர் ஆணையத்திடம் புகாரை அளித்துள்ளது. அந்த ஆணையம் உத்தரப்பிரதேச மாநில டிஜிபியிடம் இந்தப் புகாரை அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளது. எனினும் காவல்துறையிடம் தற்போது வரை அந்தப் பெண் புகார் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அந்தப் பெண் புகார் அளித்தால் உடனடியாக கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.




மேலும் படிக்க:குடும்பக் கட்டுப்பாடு விழிப்புணர்வில் ரப்பர் ஆணுறுப்பு மாடல்.. சர்ச்சைக்கு உள்ளான அரசு திட்டம்!




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண