இந்திய ரயில்வேயில் 1.49 லட்ச நுழைவு நிலை (entry-level posts) பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினிவைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.


இந்திய ரயில்வேயில் பணிபுரிய வேண்டும் என்ற ஆசையில் இளைஞர்கள் பலர் எப்போது அறிவிப்பு வரும் என காத்துள்ளனர். குறிப்பாக மத்திய அரசுப்பணிக்காக காத்திருக்கும் இளைஞர்களின் கனவை நினைவாக்கும் விதமாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மக்களவையில் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் இந்திய ரயில்வேயில்  1.49 லட்ச நுழைவு நிலை பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், விரைவில் இப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் இளைஞர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இருந்தாலும் சோஷியல் மீடியாவில் இந்த அறிவிப்பிற்கு பல்வேறு எதிர்மறை கருத்துக்களையும் பதிவிட்டுள்ளனர்.


 










குறிப்பாக, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது தேர்தலை மையமாக வைத்து தெரிவிக்கப்பட்டது எனவும், ஆண்டுதோறும் பல ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியிலிருந்து ஒய்வுகாலம் முடிந்து வெளியேறுகின்றனர். ஆனால் இதுவரை அந்த பணியிடங்கள் எதுவும் நிரப்பப்படவில்லை என கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.  மேலும் அறிவிப்பு மட்டும் தான் உங்களுடையதாக உள்ளது, ஆனால் தேர்ந்தெடுக்கும் முறையை நீங்கள் கையாள்வதில்லை எனவும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.





இந்த அறிவிப்பு மட்டுமில்லாமல் மும்பை – ஆமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தைக்குறித்து மக்களவையில் எழுப்பிய  கேள்விக்கு பதலளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மகாராஷ்டிரா மாநிலத்தில் நிலம் கையகப்படுத்துவதில தாமதம் எனவும், ஒப்பந்தங்களை முடிப்பதிலும் தாமதம் மற்றும் கொரோனா தாக்கம் ஆகியவற்றினால் தான் தாமதம் ஆகின்றது என எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண