• கோவிஷீல்ட் தொடர்பாக பரவும் செய்தி.. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா?


மிக அரிதான சந்தர்ப்பங்களில் தாங்கள் தயாரித்த கோவிஷீல்ட் தடுப்பூசியானது பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தில் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகளை தயாரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தன. கோவிஷீல்ட் மற்றும் வாக்ஸ்செவ்ரியா என்ற பெயர்களில் இந்த தடுப்பூசிகள் உலகளவில் விற்கப்பட்டன. இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் தடுப்பூசிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டன.  மேலும் படிக்க..



  • வாகன ஓட்டிகளே உஷார் - ஸ்டிக்கர்களை அகற்றாவிட்டால் இன்று முதல் அபராதம் - எவ்வளவு தெரியுமா?


ஊடகத்தில் பணியாற்றுபவரின் பெயரில் வாகனம் இருந்தால், அவர் அந்த வண்டியில் ’ஊடகம்’ என்னும் ஸ்டிக்கரை ஒட்டிக்கொள்ளலாம். PRESS, Police, Doctor, EB என துறைகள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களை தனிநபர்கள் தங்கள் வாகனங்களில் ஒட்ட சென்னை போலீஸார் தடை விதித்தனர். வாகனங்களில் இதுபோன்ற குறியீடுகள் இடம் பெற்றிருந்தால், அவற்றை  மே 1ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் மே 2-ஆம் தேதி முதல் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்தது. மேலும் படிக்க..



  • இரவோடு இரவாக வாக்கு இயந்திரங்களை மாற்றும் பாஜக - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


வாக்குப்பதிவு சதவிகித விவரங்கள் தொடர்பாக, தேர்தல் ஆணையத்தை மம்தா பானர்ஜி சாடியுள்ளார். மக்களவை தேர்தலின் இரண்டு கட்ட வாக்குப்பதிவில்,  இறுதி வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்தை மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்தார். வாக்குப்பதிவு இயந்திரங்களை கண்காணிக்குமாறு எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். முர்ஷிதாபாத்தின் ஃபராக்காவில் நடந்த பேரணியில் பேசிய பானர்ஜி, பாரதிய ஜனதா கட்சி  ஈவிஎம் இயந்திரங்களை மாற்றுவதாக குற்றம் சாட்டினார். இரவு நேரங்களில் இவிஎம் இயந்திரங்கள் மாற்றப்பட்டு, பாஜகவுக்கு வாக்களிக்கப்பட்ட இயந்திரங்கள் வைக்கப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும் படிக்க..



  • காற்றில் கரைந்த ஆனந்த ராகம்.. பின்னணிப் பாடகி உமா ரமணன் காலமானார்


இளையராஜா இசையில் பூங்கதவே தாழ்திறவா , நீ பாதி நான் பாதி , ஆனந்த ராகம் கேட்கும் காலம் உள்கிட்ட பல பிரபல பாடல்களை பாடியவர் உமா ரமணன். சென்னை அடையாறில் தனது கணவர் ரமணனுடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக அவரது உடல் நிலை குன்றியிருந்துள்ளது. இப்படியான நிலையில் மே 1 தேதி இரவு உமா ரமணன் காலமானார். அவரது இழப்பு தமிழ் இசைத்துறையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உமா ரமணனின் இறுதி சடங்குகள் சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் இன்று மே 2 அம் தேதி மாலை நடைபெற இருக்கின்றன. மேலும் படிக்க..