• ஜார்க்கண்ட் அமைச்சரை அதிரடியாக கைது செய்த ED.. எதிர்க்கட்சிகளுக்கு தொடர் நெருக்கடி!




மத்திய விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய பாஜக அரசு மிரட்டுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பல எதிர்க்கட்சி தலைவர்களின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி கைது செய்துள்ளது.  டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தமிழ்நாடு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மேலும் படிக்க..




  • Jyotiraditya Scindia: குவாலியர் மகாராணி! காலமானார் ஜோதிராதித்ய சிந்தியா தாயார் ராஜமாதா மாதவி - யார் இவர்?




பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தாயாரும், குவாலியர் அரச குடும்பத்தின் ராஜமாதாவுமான  மாதவி ராஜே, டில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று ( மே 15 )காலமானார். 


இவர், உடல் நலக் குறைபாடு காரணமாக கடந்த இரண்டு மாதங்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த இரண்டு வாரங்களாக மாதவி ராஜே சிந்தியாவின் உடல்நிலை மிகவும் மோசமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை காலமானார். மேலும் படிக்க..




  • CAA: சி.ஏ.ஏ. கீழ் முதல்முறையாக குடியுரிமை பெற்ற மக்கள் - எத்தனை பேருக்கு தெரியுமா?




மக்களவை தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு சில நாள்களுக்கு முன்புதான், சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. பெரும் எதிர்ப்புக்கு மத்தியில், கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி, குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. இந்த சட்டத்தின் கீழ் எத்தனை பேருக்கு இதுவரை குடியுரிமை வழங்கப்பட்டது என்பது மிகப்பெரிய கேள்வியாக இருந்து வந்தது. இந்த சூழலில், குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் 14 பேருக்கு இன்று குடியுரிமை சான்றிதழ்கள் அளிக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா, சிஏஏ சான்றிதழ்களை வழங்கினார். மேலும் படிக்க..




  • Andhra Pradesh: ஆந்திர தலைமைச் செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு; என்ன நடந்தது?




ஆந்திர தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகிய இருவரும் நேரில் ஆஜராகுமாறு இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திராவில் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை தேர்தலின் போது நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. தேர்தலின் போது, ஏன் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது தொடர்பாக, நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் படிக்க..