• சூரிய வெடிப்பை க்ளிக் செய்த ஆதித்யா எல் 1 விண்கலம்.. இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம்


சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ தரப்பில் அனுப்பப்பட்ட ஆதித்தயா எல் 1 விண்கலம் மே10 மற்றும் 12  ஆம் தேதிகளில் சூரியனில் ஏற்பட்ட வெடிப்பை புகைப்படமாக எடுத்து பூமிக்கு அனுப்பியுள்ளது. சூரியனை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ஆதித்யா எல்-1 விண்கலம் கடந்தாண்டும் செப்டம்பர் 1 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.  பூமிக்கும், சூரியனுக்கும் இடையே உள்ள லெக்ராஞ்சியன் புள்ளி 1-இல் சூரியனை நோக்கி இந்த விண்கலம் தனது பயணத்தை தொடங்கியது. மேலும் படிக்க..



  • 5 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்ந்த பிரதமர் மோடியின் வருமானம் - ராகுல்காந்தியின் நிலை என்ன?


பிரதமர் நரேந்திர மோடியின் ஆண்டு வருமானம் 2018-19 முதல் 2022-23 வரை இரட்டிப்பாகியுள்ளது.  அதே நேரத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு எம்.பி.யுமான ராகுல் காந்தியின் வருமானம் பிரதமரை விட நான்கு மடங்கு அதிகம் என தேர்தல் பிரமாண பத்திரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது. அதன்படி, ரூ. 3.02 கோடி மதிப்பிலான சொத்துக்களை கொண்டுள்ள மோடி, தனக்கு அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை எனவும், சொந்தமாக கார், நிலம் மற்றும் வீடு கூட கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.  2022-23ஆம் ஆண்டில் தனது வருமானம் ரூ.23.56 லட்சம் எனவும் தேர்தல் பத்திரத்தில் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் படிக்க..



  • மதம் சார்ந்த பரப்புரையா? ”இந்து - முஸ்லீம்னு நான் சொல்லவே இல்லையே” - அந்தர் பல்டி அடித்த பிரதமர் மோடி


 இந்து - முஸ்லீம் என பிரித்து பார்த்தால் நான் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதில் அர்த்தமே இல்லை என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் நடந்த பேரணியின் போது, ​​நாட்டின் வளங்கள் மீது சிறுபான்மை சமூகத்தினர் உரிமை கோருவது தொடர்பாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாக மோடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.  "ஊடுருவுபவர்கள்" மற்றும் "அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள்" போன்ற வார்த்தைகள் மூலம், இஸ்லாமியர்களை தான் பிரதமர் மோடி குறிப்பிடுவதாக கண்டனங்கள் குவிந்தன. மதம் சார்ந்து பரப்புரை மேற்கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் படிக்க..



  • சாப்பிட்டு முடித்த பிறகு காபி, டீ குடிக்கலாமா? ICMR சொல்வது என்ன?


இந்திய கலாச்சாரத்தில் இரண்டர கலந்த காபி, டீ அனைத்து தரப்பு மக்களால் அதிகம் விரும்பப்படும் பானங்களாக உள்ளன. காலை, மதியம், மாலை, இரவு என காலம், நேரம் பார்க்காமல் காபி, டீ அருந்துவதை இந்தியர்கள் பழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், காபி, டீ பானங்களை அதிகமாக அருந்த வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அறிவுறுத்தியுள்ளது. தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து புதிய உணவுமுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க..




  • ஓவைசிக்காக பிரச்சாரம் செய்தாரா பிரதமர் மோடி? வைரலாகும் வீடியோ உண்மையானதா?




நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் நான்காம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. 400 இடங்கள் என்ற இலக்கை எட்டுவதற்காக தென் மாநிலங்களில் பாஜக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்கிடையே, பிரதமர் மோடியின் பொதுக்கூட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு அவர் ஆதரவு தெரிவித்து போல் பேசியுள்ளதாக இருக்கிறது மேலும் படிக்க..