• அதிர்ச்சி! - எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 32 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படை!


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இருவேறு சம்பவங்களில் 32 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று பிற்பகல் சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 1500க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த நிலையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 25 மீனவர்களையும், மன்னார் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 7 மீனவர்கள் என மொத்தம் 32 பேரை கைது செய்தது.  மேலும் படிக்க..



  • உங்க வாக்காளர் அடையாள அட்டை கிழிஞ்சுபோச்சா..? உடைஞ்சுபோச்சா..? எளிதாக பெற இதை செய்யுங்க!


மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டு, தற்போது நாடு முழுவதும் ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஜூன் 4ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. மேலும் படிக்க..



  • "இது ரொம்ப மோசம்" சிஏஏ விவகாரத்தில் மத்திய அரசை சீண்டுகிறதா அமெரிக்கா.. நடந்தது என்ன?


அடுத்த மாதம், 19ஆம் தேதி, நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு ஒரு சில நாள்களுக்கு முன்புதான், சிஏஏ எனப்படும் குடியரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. குறிப்பாக, இஸ்லாமியர்களுக்கு எதிராக கருதப்படும் சிஏஏ திருத்த சட்டத்தை அவர்களின் புனித மாதமாக கருதப்படும் ரமலான் மாதத்தில் இந்தியா முழுவதும் அமல்படுத்தியது பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. மேலும் படிக்க..



  •  மக்களவை தேர்தல்: வெளியாகும் அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல்.. யாருக்கு எந்த தொகுதி?


மக்களவை தேர்தலில் அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட நிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கட்சிகள் தரப்பில் வேட்பாளர் பட்டியல், கூட்டணி உடன்படிக்கை, தேர்தல் அறிக்கை ஆகியவை வெளியிடப்பட்டு வருகிறது. இதுபோக தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை மும்மரமாக செயல்படுத்தி வருகிறது. அதிமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிட இருந்த நிலையில் நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். மேலும் படிக்க..



  • வேட்பாளர்கள் மீதுள்ள குற்ற வழக்குகளை தொலைக்காட்சியில் 3 முறை ஒளிபரப்ப தேர்தல் ஆணையம் உத்தரவு


இந்திய தேர்தல் ஆணையமானது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குட்பட்டு, நாடாளுமன்ற தேர்தல்களில் போட்டியிடும் குற்ற வழக்குகள் உள்ள வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. வேட்பாளர்கள் தங்களது குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களை செய்தித்தாள்கள் மற்றும் தொலைக்காட்சி சேனல்களில் உரிய படிவங்களில் விளம்பரம் செய்ய வேண்டும். மேலும் படிக்க..