• பாஜக கூட்டணி எம்.பிக்கள் இன்று ஆலோசனை - அமைச்சரவை இறுதியாகிறதா? நாயுடு - நிதிஷ் ஹாப்பியா?


தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டத்தில், மோடி மக்களவை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மையை பெற முடியவில்லை. அதைதொடர்ந்து, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடைபெற்ற கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. மேலும் படிக்க..



  • வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை: ஸ்டிக்கரால் போலீஸுக்கு உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு


வாகனங்களில் இருக்கும் நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னையில் தனியார் வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக்கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை ஜூன் 20 ஆம் தேதி ஒத்திவைத்த நீதிமன்றம் அன்றைய தினம் விரிவான உத்தரவு பிறப்பிப்பதாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராகவும் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் படிக்க..



  • பங்குச்சந்தை தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - பியூஷ் கோயல்


நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராவது ராகுல் காந்திக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தல் முடிவு குறித்தும் , கருத்து கணிப்புகள் குறித்தும் மற்றும் பங்குச் சந்தையின் தாக்கம் குறித்தும் பேசினார். அவர் பேசியதாவது, "தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதனால்,  பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றது. இந்நிலையில் 38 லட்சம் கோடி ரூபாய் பங்குச் சந்தையில் இழப்பு ஏற்பட்டது. போலியான கருத்துக் கணிப்புகள் மூலம், இந்த இழப்புகள் ஏற்பட்டன. மேலும் படிக்க..



  • மோடி 3.0 - 100 நாட்கள் தான்: இதில் முதலீடு பண்ணுனா ஜாக்பாட்! பங்குகளை பட்டியலிட்ட CLSA


 மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றதும், முதல் 100 நாட்களில் பயனடைய உள்ள நிறுவனங்களின் விவரங்களை முன்னணி தரகு நிறுவனங்கள் பட்டியலிட்டுள்ளன. அதன்படி, L&T, IRB, NCC ஆகிய நிறுவனங்கள் மோடி 3.0 அரசின் முதல் 100 நாள் செயல்திட்டத்தால் அதிகம் பலனடையும் எனவும், இதன் காரணமாக அந்த நிறுவன பங்குகளின் மதிப்பு பல மடங்கு உயரும் என்றும், clsa எனப்படும் கேபிடல் ஸ்டாக் மார்கெட் நிறுவனம்   கணித்துள்ளது.இதேபோனேறு கோல்ட்மேன் சேக்ஸ் நிறுவனம், தனியார் வங்கிகள் அதிக பலனடயும் என கூற, மேலும் படிக்க..



  • கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! விமான நிலையத்தில் தாக்கிய பெண் பாதுகாப்பு அதிகாரி - ஷாக்


சமீபத்தில் மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றிபெற்று, மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையில், சண்டிகர் விமான நிலையத்தில் பணியமர்த்தபட்ட சிஐஎஸ்எஃப் பெண் காவலாளி ஒருவர் கங்கனா ரனாவத்தை அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க..