சமீபத்தில் மக்களவை தேர்தலில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றிபெற்று, மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தநிலையில், சண்டிகர் விமான நிலையத்தில் பணியமர்த்தபட்ட சிஐஎஸ்எஃப் பெண் காவலாளி ஒருவர் கங்கனா ரனாவத்தை அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்:


சண்டிகர் விமான நிலையத்தில் பிற்பகல் 3.40 மணிக்கு கங்கனாவை கன்னத்தில் சிஐஎஸ்எஃப் பெண் காவலாளி அறைந்ததாக கூறப்படுகிறது. கங்கனா ரனாவத் சண்டிகரில் இருந்து டெல்லிக்கு திரும்பி செல்லும்போது இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. பரப்புரைகளின்போதும், முன்பு விவசாயிகள் போராட்டம் நடந்தபோதும், விவசாயிகள் குறித்து கங்கனா, காலிஸ்தானிகள் என கருத்து தெரிவித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த சிஐஎஸ்எஃப் பெண் பாதுகாவலர் கோபமடைந்து கங்கனா கன்னத்தில் அறைந்ததாகவும் கூறப்படுகிறது.






இந்த விவகாரம் குறித்து கங்கான ரனாவத் புகார் அளித்துள்ளதோடு, சிஐஎஸ்எஃப் பெண் பாதுகாவலரை பணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். கங்கனாவை அறைந்த சி.ஐ.எஸ்.எஃப். பெண் பாதுகாவலர் பெயர் குல்விந்தர் கவுர் என்று கூறப்படுகிறது. 






தற்போது விமான நிலையத்தில் இருக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் குல்விந்தர் கவுரை கமாண்டன்ட் அறையில் உட்கார வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ள  கங்கனா ரனாவத் இந்த சம்பவத்திற்கு பிறகு டெல்லி சென்றுவிட்டார்.