Stock Market Modi Stock: மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்றதும், முதல் 100 நாட்களில் பயனடைய உள்ள நிறுவனங்களின் விவரங்களை முன்னணி தரகு நிறுவனங்கள் பட்டியலிட்டுள்ளன. 


100 நாட்களில் லாபம் காணப்போகும் நிறுவனங்கள்:


அதன்படி, L&T, IRB, NCC ஆகிய நிறுவனங்கள் மோடி 3.0 அரசின் முதல் 100 நாள் செயல்திட்டத்தால் அதிகம் பலனடையும் எனவும், இதன் காரணமாக அந்த நிறுவன பங்குகளின் மதிப்பு பல மடங்கு உயரும் என்றும், clsa எனப்படும் கேபிடல் ஸ்டாக் மார்கெட் நிறுவனம்   கணித்துள்ளது.இதேபோனேறு கோல்ட்மேன் சேக்ஸ் நிறுவனம், தனியார் வங்கிகள் அதிக பலனடயும் என கூற, ஜெஃப்ரீஸ் நிறுவனம் ஆவாஸ் ஃபைனான்ஸியர்ஸ், கேன் ஃபின் ஃபைனான்ஸ் ஆகியவை சிறந்த ஹவுசிங் ஃபைனாங்ஸ் நிறுவனங்களாக இருக்கும் என கணித்துள்ளன. அதேநேரம், மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் எச்.டி.எஃப்.சி லைஃப் நிறுவனம் பெரும் வளர்ச்சியை காணும் என நம்பிக்கையை தெரிவித்துள்ளது.


மோடி 3.0 ஆட்சியின் நோக்கம்:


மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றதும், முதல் 100 நாட்களில் முன்னெடுக்க வேண்டிய செயல் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு ஆலோசனகளை நடத்தினார். அதன்படி, உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு தளவாடங்களில் அவர் அதிக கவனம் செலுத்துவார் என கருதப்படுகிறது. அரசின் நிதிநிலையை மேம்படுத்த சொத்துகளை பணமாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.  இதனிடையே, ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளின் கோரிக்கைகள ஏற்று மாநில மூலதனச் செலவுகளையும் புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் மோடி 3.0 ஆட்சி உள்ளது என கேபிடல் ஸ்டாக் மார்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.


உள்கட்டமைப்பு நிறுவனங்கள்:


அதன்படி, லார்சன் & டூப்ரோ (எல்&டி), ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், என்சிசி & ஜே குமார் இன்ஃப்ராபிராஜெக்ட்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் அடுத்த 100 நாட்களில் முக்கிய பயனாளிகளாக இருப்பார்கள் என, உலகளாவிய முதலீட்டு வங்கியான கேபிடல் ஸ்டாக் மார்கெட் கணித்துள்ளது.


எகிறப்போகும் தனியார் வங்களின் பங்குகள்:


சில தனியார் துறை வங்கிகளில் மேற்கொள்ளப்பட உள்ள செங்குத்தான திருத்தங்கள்,  சிறந்த எண்ட்ரி லெவல் வாய்ப்புகளை வழங்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் கருதுகிறது. கதையை விட அடிப்படைகள் முக்கியம் என்றாலும், இந்த உலகளாவிய முதலீட்டு வங்கியானது பொதுத்துறை நிறுவனங்களை விட தனியார் வங்கிகளுக்கு அதிக ஆதரவை வழங்கியுள்ளது.  கோல்ட்மேன் சாக்ஸ் போர்ட்ஃபோலியோவில் உள்ள முக்கிய ஏற்றம் காணப்போகும் நிறுவனங்களாக HDFC வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகியவை பட்டியலிடப்பட்டுள்ளன. NBFC களில் கிரெடிட் அக்சஸ் கிராமீன், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் மற்றும் எல்&டி ஃபைனான்ஸ் போன்ற உலகளாவிய முதலீட்டு வங்கிகள் உள்ளன.


ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்கள்:


மோடி 3.0 அரசு அடுத்த 100 நாட்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதுப்பிக்கப்பட்ட மலிவு விலை வீட்டுத் திட்டத்தை அறிவிக்கலாம். இதனால் ஹோம் ஃபர்ஸ்ட் ஃபைனான்ஸ் கம்பெனி மற்றும் ஆவாஸ் ஃபைனான்சியர்ஸ் போன்ற மலிவு விலை வீட்டு நிதி நிறுவனங்கள் (AHFCs) நேரடி பயனாளிகளாக இருக்கக் கூடும். எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் மற்றும் கேன் ஃபின் ஹோம்ஸ் போன்ற மிட்-டிக்கெட் பிரிவு நிறுவனங்களும் பலன் பெறலாம்.  காப்பீட்டு பிரிவில் மோர்கன் ஸ்டான்லி HDFC லைஃப் மீது அதிகப்படியான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.