Morning Headlines: சென்னையில் கொடியேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை! இன்றைய முக்கியச் செய்திகள்..

Morning Headlines January 26: கடந்த 24 மணிநேரத்தில் இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.

Continues below advertisement
  • 75வது குடியரசு தின விழா.. சென்னையில் கொடியேற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

75வது குடியரசு தின விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றினார். 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்ததை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் 75வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகிய இடங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க.,

Continues below advertisement

  • ராமர் காவியத் தலைவன்; ராமருக்கு கோவில் கட்டியது அழகு - இயக்குநர் மிஷ்கின்

அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டது தொடர்பாக தமிழ் திரையுலகில் கவனிக்கப்படும் இயக்குநராக உள்ள இயக்குநர் மிஷ்கின். "ராமபிரான் பெரிய அவதாரம். அவர் ஒரு காவியத் தலைவன். அவருக்கு கோவில் கட்டியது அழகு" என தெரிவித்துள்ளார். இது தற்போது பேசுபொருளாகியுள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் இருந்த பாபர் மசூதி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கரசேவகர்களால் கடந்த 1992ஆம் ஆண்டு  டிசம்பர் 6ஆம் தேதி இடிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. இந்த சதி தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்குகளும் நடைபெற்றது. இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடந்து கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. மேலும் படிக்க.,

  • கேப்டன் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது! மத்திய அரசு அறிவிப்பால் தொண்டர்கள் மகிழ்ச்சி!

தே.மு.தி.க.வின் தலைவரும், எதிர்க்கட்சியின் முன்னாள் தலைவருமாகவும் பொறுப்பு வகித்தவர் நடிகர் விஜயகாந்த். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி உயிரிழந்தார். அவர் கடந்த 5 ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் இருந்தாலும், அவரது மரணம் ஒட்டுமொத்த தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ரஜினிகாந்த், கமல்ஹாசன்விஜய் உட்பட ஒட்டுமொத்த திரையுலகமே கண்ணீருடன் நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும் படிக்க.,

  • கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி: அசத்தும் தமிழக வீரர்கள்! குவியும் தங்கம்

ஆறாவது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தமிழ்நாட்டில் சென்னைகோவைமதுரைதிருச்சி ஆகிய நகரங்களில் நடைபெற்று வருகிறதுதேசிய அளவில் நடைபெறும் இப்போட்டிகளில் பங்கேற்பதற்காக உத்திரபிரதேசம்ராஜஸ்தான்பஞ்சாப்மத்தியபிரதேசம்கர்நாடகாமிசோரம்சண்டிகார்மகாராஷ்டிராகேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் Group A மற்றும் Group B என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு மோதுகின்றனஆண்கள்பெண்கள் என இரண்டு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடைபெறுகிறது. மேலும் படிக்க.,

  • கடன் முதல் மானியம் வரை.. இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?

இன்னும் 2 மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது கடைசி மத்திய பட்ஜெட்டை தாக்கல் உள்ளது. தேர்தல் நடக்கவிருப்பதால் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. எனவே, இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார்.  ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் முடிந்தவுடன் புதிய அரசு அமைந்த பிறகு, வரும் ஜூலை மாதம் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க.,

Continues below advertisement