• அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம் - ராமேஷ்வரம் டூ காஷ்மீர், ஒவ்வொரு மாநிலத்தின் அடையாளம் என்ன?


அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்திற்கான பொருட்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கொண்டு வந்து ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற அரசின் கொள்கையை பறைசாட்டுகிறது. அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. இதையயொட்டி இந்த கோயில் கட்டுமானம் எப்படி, ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற அரசின் கொள்கையை பறைசாட்டுகிறது என்பது தொடர்பாக அரசு தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், “காஷ்மீரின் பனி மூடிய சிகரங்கள் முதல் கன்னியாகுமரியில் சூரிய ஒளியில் நனைந்த கடற்கரைகள் வரை, ராமரின் பெயர் இந்தியா முழுவதும் பக்தியுடன் எதிரொலிக்கிறது. இப்போது, இந்தப் பக்தி அயோத்தியில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ராமர் கோயிலின் வடிவத்தில் ஒரு உறுதியான வடிவத்தை எடுத்துள்ளது. மேலும் படிக்க.,



  • 11 நாட்களாக விரதமிருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பிரதமர் மோடி.. நிகழ்ச்சி நிரல் என்னென்ன..?


ஜனவரி 22ம் தேதியான இன்று, அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் ராம் லல்லா சிலை பிரதிஷ்டை செய்யப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.  இந்தநிலையில், இந்த நிகழ்ச்சிக்காக இன்று அயோத்திக்கு வரும் பிரதமர் மோடி, 4 மணி நேரம் தங்குகிறார் என மத்திய அரசு தகவலை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு பகிர்ந்துள்ள தகவலின்படி, பிரதமர் மோடி சிறப்பு விமானம் மூலம் காலை 10.25 மணிக்கு அயோத்தி விமான நிலையத்தில் தரையிறங்குகிறார். அதன்பிறகு, விமான நிலையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு ராமர் கோயிலுக்கு சென்றடைவார். மேலும் படிக்க.,



  • பில்கிஸ் பானு வழக்கு - குஜராத்தைச் சேர்ந்த 11 குற்றவாளிகளும் மீண்டும் சிறையிலடைப்பு


பில்கிஸ் பானு வழக்கில் முன்கூட்டியே விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட அவகாசம் முடிவடைந்த நிலையில்,  11 பேரும் காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர். பில்கிஸ் பானு கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 11 பேரும், குஜராத்தின் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா துணைச் சிறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சரணடைந்தனர். குஜராத் அரசால் முன்கூட்டியே அவர்கள் விடுவிக்கப்பட்டது சட்டவிரோத நடவடிக்கை, அவர்கள் மீண்டும் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. மேலும் படிக்க.,



”தெற்கில் விடியல் கிடைத்தது போல இந்தியா முழுவதும் விடியல் விரைவில் கிடைக்கும். இந்த மாநாட்டில் பங்கேற்ற பிறகு எனக்கு 20 வயது குறைந்து விட்டது போல தோன்றுகிறது. திராவிட இயக்கம் தோன்றி 100 ஆண்டுகளாகிவிட்டது. திமுக தோன்றி 75 ஆண்டுகளாகி விட்டது. திமுக தொடங்கியபோது இருந்த அதே எழுச்சி இன்றைக்கும் இளைஞர்களிடம் இருப்பது திமுக தலைவராக எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மகன் தந்தைக்காற்றும் பணி என்பதை போல கழகப் பணி, அரசியல் பணி, அரசுப் பணி என எல்லாவற்றிலும் அமைச்சர் உதயநிதி  எனக்கு துணையாக இருக்கிறார். மேலும் படிக்க.,



  • பூக்கள், வண்ணமயமான விளக்குகளால் மின்னும் அயோத்தி.. சான் பிரான்சிஸ்கோவில் ஒலிக்கும் ராமர் கோஷம்..!


ராமர் கோயிலில் இன்று (ஜனவரி 22) நடைபெறவுள்ள பிரமாண்டமாக கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு அயோத்தி நகரம் மட்டுமல்ல, இந்தியாவே தயாராகி வருகிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். விழா முடிந்த மறுநாளே இந்த கோயில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுகிறது. கும்பாபிஷேகம் மதியம் 12.20 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க.,