கிளாம்பாக்கத்தில் ப்ரீபெய்டு ஆட்டோ வசதி.. அட இது சூப்பரா இருக்கே..! கிலோமீட்டருக்கு இவ்வளவுதானா..!
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் தற்போது அங்கு ப்ரீபெய்ட் ஆட்டோ சேவை துவங்கப்பட்டுள்ளது. சுமார் 200 ஆட்டோக்கள் தற்பொழுது பதிவு செய்யப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பகுதியில் இருந்து சென்னை உள்பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்டோ சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது.சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டுள்ள இந்த பணி ஒரு கிலோமீட்டருக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக 18 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க
ஸ்ரீரங்கம் செல்லும் பிரதமர் மோடி..! 4,000 போலீசார் குவிப்பு
தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார். இந்நிலையில், பயணத்தின் இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் சென்று, அங்குள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்த உள்ளார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் படிக்க
கர்நாடகாவுக்கு விரட்டப்பட்ட 100க்கும் மேற்பட்ட யானைகள் மீண்டும் தமிழ்நாடு எல்லையில் தஞ்சம்
கர்நாடக மாநிலத்தின் வனப்பகுதிற்கு விரட்டப்பட்ட யானைக் கூட்டம் தளி, தேன்கனிக்கோட்டை , ஓசூர் பகுதியில் மீண்டும் திரும்பியுள்ள யானைகளால் மக்கள் பீதிக்கு ஆளாகியுள்ளனர். தேன்கனிக்கோட்டை சுற்றியுள்ள வனப்பகுதியில் 20-க்கும் மேற்பட்ட யானைகளும், ஓசூர் சானமாவு பகுதியில் 15 யானைகளும் உள்ளன. இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிவிட கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் யானைகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தகுந்த நிவாராணம் அளிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
ஜப்பானிடம் தோற்று ஒலிம்பிக் தகுதி இழப்பு.. இரண்டரை ஆண்டுகளில் இடிந்துபோன இந்திய மகளிர் ஹாக்கி அணி!
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு கூட தகுதி பெற முடியாத அளவுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி பரிதாப நிலைக்கு சென்றுள்ளது. இது தற்போது இந்திய மகளிர் ஹாக்கி அணிக்கும், ஒவ்வொரு இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
விஜயகாந்த் பற்றி தப்பு தப்பா பேசாதீங்க - கண்ணீர் மல்க விஜய பிரபாகரன் கோரிக்கை
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு சிறப்பு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விஜயகாந்தின் மகன்களான சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன் இருவரும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய விஜயபிரபாகரன், விஜயகாந்துக்கு நினைவு இல்லை என நிறைய யூடியூப் சேனல்களில் தப்பு தப்பா சொல்றீங்க அதெல்லாம் பொய். அப்பா இறப்பதற்கு 2 நாட்கள் முன்னாடியும் வீட்டில் வேலை செய்த 2 பணியாளர்களிடம் தான் நடிச்ச எல்லா படத்தோட பாட்டையும் போட சொல்லி கேட்டு ரசித்து கொண்டிருந்தார் என கூறினார்.