தமிழ்நாடு:



  • சென்னையில் கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - சாம்பியன்களை உருவாக்கும் மாநிலம் தமிழ்நாடு என பெருமிதம் 

  • திருச்சி ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

  • சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டு உலக சாதனை படைக்கும் - அமைச்சர் கே.என்.நேரு தகவல்

  • முதல் தலைமுறை வாக்காளர்களை சந்திக்க மீண்டும் தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி - பாஜக தலைவர் அண்ணாமலை தகவல் 

  • டிடி பொதிகை சேனல் டிடி தமிழ் என பெயர் மாற்றம் - ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி 

  • இந்தியாவின் விளையாட்டுத்துறை தலைநகராக தமிழ்நாட்டை மாற்றுவதே இலக்கு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி 

  • தமிழ்நாடு மிகப்பெரிய பாரம்பரியம் கொண்டுள்ளது - கேலோ விளையாட்டு போட்டிகள் மூலம் கனவு நனவானதாக அமைச்சர் உதயநிதி பெருமிதம் 

  • பொங்கல் பரிசு வழங்குவது 5 நாட்களில் நிறுத்தப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு அரசுக்கு கண்டனம் 

  • பௌர்ணமி மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு சதுரகிரி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி 

  • பாஜகவில் இருந்து விலகிய நடிகர் காயத்ரி ரகுராம் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

  • தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்த் மறைவுக்கு நடந்த சிறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி - பிரபலங்கள் பங்கேற்று அஞ்சலி 

  • அரசியல் ஆதாயத்துக்காக ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு 

  • பணிப்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு

  • ஜனவரி 23 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு 

  • நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைப்பு 


இந்தியா: 



  • அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் வைக்கப்படும் சிலையில் புகைப்படம் வெளியீடு

  • ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் உற்சாகம் பரவியுள்ளதாக உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் 

  • குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பிப்ரவரி 15 ஆம் தேதி வரை ட்ரோன்கள் பறக்க தடை 

  • ராமர் கோயில் குடமுழுக்கு விழா -ராஜஸ்தானில் 22ஆம் தேதி இறைச்சி கடைகளை மூட உத்தரவு 

  • மணிப்பூர், நாகாலாந்தில் ராகுல்காந்தி யாத்திரைக்கு கிடைத்த வரவேற்பால் பாஜகவுக்கு கலக்கம் - கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா

  • பீகாரை தொடர்ந்து ஆந்திர பிரதேசத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு தொடக்கம் 

  • அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா - 1 லட்சம் லட்டுகளை அனுப்பிய திருப்பதி தேவஸ்தானம் 

  • கூட்டணியில் உரிய முக்கியத்துவம் அளிக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டி - மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவிப்பு


உலகம்: 



  • பாகிஸ்தான் - ஈரான் இடையே பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்தும் பொருட்டு அமைச்சர்கள் தொலைபேசு மூலம் பேச்சு 

  • ரஷ்யாவுக்கு புகுந்து ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன் - பொதுமக்கள் பீதி

  • அமெரிக்கா, தென்கொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நீருக்கடியில் அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியா

  • சிங்கப்பூரில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த அமைச்சர் ஈஸ்வரன் ஊழல் குற்றச்சாட்டில் கைது 

  • மீண்டும் மோடி இந்தியாவின் பிரதமராக வரவேண்டும் என நிறைய பேர் நினைக்கின்றனர் - அமெரிக்க பாடகி மேரி மில்பென் கருத்து 


விளையாட்டு: 



  • ப்ரோ கபடி லீக் தொடர்; தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்திய பெங்களூரு புல்ஸ்

  • ப்ரோ கபடி லீக்கில் உத்தரப்பிரதேச யோத்தாஸ் அணியை வீழ்த்தி பாட்னா பைரேட்ஸ் வெற்றி 

  • ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய தென்னாபிரிக்கா

  • ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டியில் ஜப்பானிடம் தோற்றதால் வாய்ப்பை இழந்தது இந்திய பெண்கள் ஹாக்கி அணி