• எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பாஜகவில் இணைந்த விஜயதரணி!


கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உறுப்பினராக காங்கிரஸ் கட்சி சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற விஜயதரணி நேற்று பாஜகவில் இணைந்தார்.அவர் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தெரிவித்தது. இப்படியான நிலையில்  தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக விஜயதரணி தெரிவித்துள்ளார். விஜயதரணி ராஜினாமாவால் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியாகியுள்ளது.மேலும் படிக்க



  • சென்னையில் 44 மின்சார ரயில்களின் சேவை இன்று ரத்து!


சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக 44 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.  காலை 11 மணி முதல் 3.15 மணி வரை தாம்பரம், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்கள் சேவை இருமார்க்கத்திலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள், பேருந்துகள், மெட்ரோ ரயில்களின் சேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே முன்கூட்டியே பயணிகளுக்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மக்கள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது. மேலும் படிக்க



  • சென்னையில் ‘தேசிய முதியோர் நல மருத்துவமனை’  இன்று திறப்பு 


சென்னை கிண்டியில் அமைந்துள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை , பிரதமர் மோடி இன்று காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார். தேசிய முதியோர் நல மருத்துவமனை தொடர்பான அறிவிப்பு கடந்த 2014ம் ஆண்டு வெளியானது. அதைதொடர்ந்து சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் மருத்துவமனைக்காக தமிழக அரசு 9 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தந்தது. இதையடுத்து  கட்டுமானப் பணிகள் கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மேலும் படிக்க



  • தென்மாவட்ட விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.201.67 ஒதுக்கி அரசாணை


தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட, ரூ.201.67 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அண்மையில் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் பட்ஜெட்டின் போது, தென்மாவட்ட விவசாயிகளுக்கான வெள்ள நிவாரணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருந்தது. மேலும் படிக்க



  • யு.பி வாரியர்ஸை வீழ்த்திய பெங்களூரு அணி.. மகளிர் பிரிமீயர் லீக்கில் அசத்தல் 


மகளிர் பிரீமியர் லீக்கில் யு.பி வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்.சி.பி அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் சேர்த்தது.  அதன் பின்னர் களமிறங்கிய யு.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட்டுகளை 7 இழந்து  155 ரன்கள் சேர்த்தது. மேலும் படிக்க