தமிழ்நாடு:



  • மார்ச் 4ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருவதாக தகவல் - பாஜகவின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்

  • தென்மாவட்ட விவசாயிகளுக்கான வெள்ள நிவாரணமாக ரூ.201.67 ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடு

  • நெம்மேலியில் ரூ. 1,516 கோடி செலவில் கட்டப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்  - முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

  • நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீகிற்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு

  • காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜவில் சேர்ந்த விஜயதரணி, தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகருக்கு கடிதம்

  • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் தோழன் திராவிட மாடல் அரசு - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

  • சந்தோஷ் சிவனுக்கு கேன்ஸ் ஒளிப்பதிவுச்  சாதனையாளர் விருது - இந்த விருதை பெறும் முதல் இந்தியர் ஆகிறார்

  • போயஸ் கார்டனில் சசிகலா புதியதாக கட்டியுள்ள வீட்டிற்கு நேரில் சென்று, அவரை சந்தித்தார் நடிகர் ரஜினிகாந்த்

  • கிளாம்பாக்கம் செல்பவர்களின் வசதிக்காக நாளை முதல்,  சென்னை கடற்கரையில் இருந்து செல்லும் 5 மின்சார ரயில்களின் சேவை கூடுவாஞ்சேரி வரை நீட்டிப்பு

  • மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து சேவை உதகையில் இன்று தொடக்கம் - மற்றபகுதிகளுக்கும் விரிவுபடுத்த விரைவில் நடவடிக்கை


இந்தியா:



  • புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் ஜுலை ஒன்றாம் தேதி முதல் அமல் - மத்திய அரசு சர்வாதிகார போக்குடன்  நடந்துகொள்வதாக வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு
      

  • தேர்தல் வெளிப்படை தன்மையுடன் நடப்பது உறுதி செய்யப்படும்; பண நடமாட்டத்தை தடுக்க தீவிர கண்காணிப்பு: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் எச்சரிக்கை

  • பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க குஜராத் சென்றடைந்த மோடி - ஜாம்நகரில் குவிந்த தொண்டர்களை நோக்கி காரில் நின்றபடி கையசைத்தார்

  • அயோத்தி ராமர் கோயிலுக்கு ஒரே மாதத்தில் 25 கோடி ரூபாய் நன்கொடை - இதுவரை 60 லட்சம் பேர்  சுவாமி தரிசனம் செய்ததாக தகவல்

  •  ஐதராபாத்தில் டி.வி. தொகுப்பாளரை கடத்திச் சென்று காதல் தொல்லை கொடுத்த பெண் தொழிலதிபர்

  • I.N.D.I.A. கூட்டணியில் காங்கிரஸ் - ஆம் ஆத்மி இடையே மக்களவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு இறுதியானது

  • ராகுல் காந்தியின் நியாய யாத்திரையில் பிர்யங்கா காந்தி பங்கேற்பு - மொராதாபாத்தில் நடைபெற்ற ஊர்வலத்தில் சமாஜ்வாதி கட்சியினர் உற்சாக வரவேற்பு


உலகம்:



  • செங்கடல் தாக்குதலுக்கு பதிலடி - ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்

  • அமெரிக்காவில் கூகுள் பே சேவை ஜுன் முதல் நிறுத்தம் - பயனாளர்கள் அதிர்ச்சி

  • சீனாவின் நான்ஜிங்கில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - 15 பேர் பலி, 44 பேர் படுகாயம்


விளையாட்டு:



  • மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் உபி வாரியர்ஸை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூரு அணி

  • மகளிர் பிரீமியர் கிரிக்கெட் லீக் தொடரின் இன்றைய போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்ப இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன

  • இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டி - 134 ரன்கள் பின்தங்கி இந்திய அணி தடுமாற்றம்

  • வாடகை உள்ளிட்ட நிலுவை தொகையை செலுத்தாததால் ஜெய்ப்பூர் கிரிக்கெட் மைதானத்திற்கு சீல் வைப்பு