• இனி வெங்காயம் இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.. 54,670 டன் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கிய இந்தியா..


இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய வருகிற மார்ச் 31 ஆம் தேதி வரை மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்த நிலையில் வங்காளதேசம், மொரீஷியஸ், பூடான், பஹ்ரைம் உள்ளிட்ட நாடுகளுக்கு 54,760 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறுகையில், "வங்காளதேசத்திற்கு 50,000 டன், மொரீஷியஸுக்கு 1,200 டன், பஹ்ரைனுக்கு 3,000 டன் மற்றும் பூட்டானுக்கு 560 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க..



  • பாஜக, பிரதமர் மோடியை விமர்சிக்கும் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் - ஊழல் வழக்கில் 30 இடங்களில் சிபிஐ சோதனை


கிரு நீர்மின் திட்டம் தொடர்பான வழக்கில்,  ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தொடர்புடைய பல இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. ஜம்மு & காஷ்மீர் நீர்மின் திட்ட ஒப்பந்தம் வழங்கியதில் ஊழல் நடந்ததாகக் கூறப்படும் விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த யூனியன் பிரதேசத்தின் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக்கின் வளாகம் உட்பட 30க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. உத்தரபிரதேசம், பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களில்,  சத்யபால் மாலிக் மற்றும் அவரது நெருங்கிய உதவியாளர்கள் தொடர்புடைய இடங்களில் இந்த சோதனை அரங்கேறியுள்ளது. மேலும் படிக்க..



  • நாடாளுமன்ற தேர்தல்.. திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.  நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே உள்ள நிலையில் சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி தேர்தல் திருவிழாவானது அடியெடுத்து வைத்து வைக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இத்தனை இடங்கள் தந்தால் கூட்டணி வைக்கலாம் என சில கட்சிகள் வெளிப்படையாகவே தெரிவித்து விட்டது. மேலும் படிக்க..



  •  ”என் மேல சேற அள்ளி வீசுறாங்க" குஜராத்தில் மனம் நொந்து பேசிய பிரதமர் மோடி!


அடுத்த மாதம், நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் களம் சூடிபிடித்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. அதே சமயம், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பாஜக பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. தேர்தல் நெருங்கி வருவதால், பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதும், புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.  மேலும் படிக்க..



  • மணிப்பூர் கலவரத்திற்கு முற்றுப்புள்ளி! சர்ச்சைக்குரிய உத்தரவை திரும்பப்பெற்ற உயர் நீதிமன்றம்!


மணிப்பூரில் வன்முறை முடிவுக்கு வராத நிலையில், மணிப்பூர் உயர்நீதிமன்றம் தனது உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது. தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது. மேலும் படிக்க..