முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. 


நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே உள்ள நிலையில் சிறிய கட்சிகள் முதல் பெரிய கட்சிகள் வரை தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு என அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி தேர்தல் திருவிழாவானது அடியெடுத்து வைத்து வைக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இத்தனை இடங்கள் தந்தால் கூட்டணி வைக்கலாம் என சில கட்சிகள் வெளிப்படையாகவே தெரிவித்து விட்டது.


அந்த வகையில் தமிழ்நாட்டு மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் திமுகவை பொறுத்தவரை இந்த முறை 40 தொகுதிகளையும் கைப்பற்றிட முழு மூச்சாக களம் கண்டுள்ளது,  அந்த கட்சியை பொறுத்தவரை தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 


ஏற்கனவே தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கூட்டணி கட்சிகளுக்கு 15 தொகுதிகளை ஒதுக்கி விட்டு 25 தொகுதிகளில் போட்டியிட திமுக முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. திமுகவின் கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தங்களுக்கு வேண்டிய தொகுதிகள் பற்றி தெரிவித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கிய உறுப்பினர்களிடம் விருப்ப மனு பெறும் பணி திமுகவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்னும் சில வாரங்களில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்பதால் அனைவரும் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். 


இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடந்த  திமுக  மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கூட்டம் இன்று  திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. காலை 11.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக இந்த கூட்டமானது நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள்,அமைச்சர்கள், தொகுதி மேற்பார்வையாளர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


மேலும் இந்த நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் தேர்தலில் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பான கருத்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவே கேட்டு தெரிந்து கொள்ள உள்ளதாக கூறப்படுவதால் இக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.




மேலும் படிக்க: Coimbatore constituency : கோயம்புத்தூர் மக்களவை தொகுதி நிலவரம் என்ன? எம்.பி. சொன்னதும், செய்ததும் என்ன?