தமிழ்நாடு:



  • தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிறைவு - தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் அப்பாவு 

  • பிப்ரவரி 26 ஆம் தேதி கலைஞர் நினைவிடம் திறப்பு - அனைத்து கட்சியினரும் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு

  • திமுக மாவட்ட செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை 

  • நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சென்னை வருகை 

  • மாசித் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று தேரோட்டம் 

  • கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா இன்று தொடக்கம் 

  • ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க பரிசீலனை - அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தகவல் 

  • 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் செய்முறை தேர்வுகள் தொடக்கம் 

  • தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான கூட்டணி - மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் பேச்சு 

  • தேர்தல் போரில் எதிரிகளை ஓட விட வேண்டும் - அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேச்சு 

  • தமிழகத்தில் பல்வேறு கோயில்களில் குடமுழுக்கு விழா கோலாகலம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு 

  • மேகதாது விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 29 ஆம் தேதி கண்டன ஆர்பாட்டம் - இபிஎஸ் அறிவிப்பு 

  • மருந்துகளை நோயாளிகளுக்கு புரியும்படி கேபிட்டல் எழுத்தில் எழுத தமிழக சுகாதாரத்துறை மருத்துவர்களுக்கு உத்தரவு 

  • தமிழக சட்டப்பேரவையின் நிறைவு நாளில் 13 மசோதாக்கள் நிறைவேற்றம் 

  • தமிழக வெற்றிக் கழகம் உறுப்பினர் சேர்க்கைக்கு விரைவில் செயலி அறிமுகம் செய்யப்படும் என தகவல் 

  • தமிழக மீனவர்கள் 18 பேரை விடுவித்தது இலங்கை அரசு - ஒரு மீனவருக்கு 6 மாத சிறை தண்டனை விதிப்பு 


இந்தியா: 



  • டெல்லி எல்லையில் தீவிரமாகும் விவசாயிகள் போராட்டம் - இன்று விவசாயி மரணம் காரணமாக கருப்பு தினம் அனுசரிப்பு

  • திரிபுரா பூங்காவில் அக்பர், சீதா சிங்கங்கள் தொடர்பான வழக்கில் பெயர்களை மாற்ற உயர்நீதிமன்றம் பரிந்துரை 

  • வங்கதேசம் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி

  • ஜம்மு காஷ்மீரில் வரலாறு காணாத பனிப்பொழிவு - வெளிநாட்டு சுற்றுலா பயணி உயிரிழப்பு 

  • புவிநிலை சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட இன்சாட் -3 டிஎஸ் செயற்கைகோள் 

  • ரூ.19 ஆயிரம் கோடி செலவில் இந்திய கடற்படைக்கு 200 பிரமோஸ் ஏவுகணைகள் வாங்க மத்திய அரசு ஒப்புதல் 

  • ஜார்க்கண்ட் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அனுமதி மறுப்பு 

  • தேர்தலில் போட்டியிட முடியாதபடி கட்சியை முடக்க மத்திய அரசு சதி செய்வதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு 

  • ஊழல் வழக்கு தொடர்பாக காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் தொடர்புடைய 30 இடங்களில் சிபிஐ சோதனை 


உலகம்:



  • அமெரிக்காவில் அதிக குளிரால் உறைந்து போய் உயிரிழந்த இந்திய மாணவர் 

  • சீனாவில் பாலம் மீது சரக்கு கப்பல் மோதி 2 பேர் உயிரிழப்பு

  • பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் முதல் பெண் அமைச்சராக மரியம் நவாஸ் தேர்வாகிறார் 

  • வெனிசுலாவில் தங்க சுரங்கம் இடிந்து 15 பேர் உயிரிழப்பு 


விளையாட்டு: 



  • பெங்களூருவில் இன்று தொடங்குகிறது பெண்கள் பிரிமீயர் லீக் - முதல் ஆட்டத்தில் டெல்லி -  மும்பை அணிகள் மோதல்

  • இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் இன்று தொடக்கம் 

  • ரஞ்சி கோப்பை காலிறுதி ஆட்டம்: தமிழ்நாடு - சௌராஷ்ட்ரா அணிகள் இன்று மோதல் 

  • 2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி அட்டவணை வெளியீடு - முதல் போட்டியில் சென்னை, பெங்களூரு மோதல் 

  • ஊக்கமருந்து விவகாரத்தில் தடகள வீராங்கனை அஞ்சலி தேவிக்கு 4 ஆண்டுகள் தடை