• கர்நாடகாவில் 34 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டுபிடிப்பு - மக்கள் அச்சம்


கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஏற்படுத்திய தாக்கமும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்பும், உலகம் முழுவதும் சந்தித்த ஊரடங்கும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், உலகம் முழுவதும் உள்ள நாடுகள் கொரோனா பேரிடரில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் நிலையில், தற்போது மீண்டும் கொரோனா புதிய வடிவத்தில் அச்சுறுத்தி வருகிறது. ஜே.என்.1 வகை கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மேலும் படிக்க..



  • மூன்று புதிய குற்றவியல் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்


ஆங்கிலேயர் காலத்தில் கொண்டு வரப்பட்ட குற்ற சட்டங்களுக்கு மாற்றாக புதிய குற்றவியல் சட்ட மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு மக்களவையில் கடந்த 20ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.  கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் மூன்று முக்கியமான குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றம் குறித்த மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டது.  மேலும் படிக்க..



  • அச்சுறுத்தும் JN.1 வகை கொரோனா! என்ன செய்ய வேண்டும்? உலக சுகாதார அமைப்பு அட்வைஸ்!


சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சுகாதார ரீதியாக மட்டும் இன்றி, பொருளாதார ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இறுதியாக, விஞ்ஞான உலகின் தொடர் முயற்சிகளால் கொரோனா பெருந்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மேலும் படிக்க..



  • மகளிர் சிறையில் உருவான எஃப்.எம்! ஆர்.ஜே. அவதாரம் எடுத்த கைதிகள் - மகாராஷ்ட்ராவில் அசத்தல்


நாட்டில் ஆண் கைதிகளுக்கும், பெண் கைதிகளுக்கும் தனித்தனியே சிறைச்சாலைகள் உள்ளது. சந்தர்ப்ப சூழ்நிலையால் தவறு செய்பவர்களுக்கான தண்டனையை அனுபவிக்கும் இடமாக மட்டுமின்றி, அவர்கள் மாறும் இடமாகவும் சிறைச்சாலை இருக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்துகின்றனர். கைதிகள் தங்களது புதிய வாழ்க்கையைத் தொடங்கும் பொருட்டு, சிறைகளிலும் பல புத்தாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மும்பையில் உள்ள சிறையில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. மும்பையில் உள்ள பைகுல்லா மகளிர் சிறை. மேலும் படிக்க..



  • நாளை நடைபெறும் மண்டல பூஜை.. சுவாமி ஐயப்பனுக்கு இன்று தங்க அங்கி அணிவிப்பு.. குவியும் பக்தர்கள்..


கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப் புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் மட்டும் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். சபரிமலை ஐயப்பன் கோயில் மற்ற கோயில்களை போல் தினசரி நடை திறந்திருக்காது. மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும். மேலும் படிக்க..