தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் 31ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- சென்னையில் இன்று அதிமுக பொதுக்குழு செயற்குழு கூடுகிறது; நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களை இறுதி செய்ய இபிஎஸ் அதிரடி திட்டம்
- கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்குள் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
- மத்திய அரசு போதிய நிதியை கொடுக்கும் என நம்புகிறோம்; பேரிடர் இல்லை என கூறிய நிர்மலா இப்போது பாதிப்பை பார்க்க வருகிறார் - அமைச்சர் உதயநிதி பேட்டி
- சென்னை - நெல்லை இடையே வியாழன்கிழமைகளில் இயக்கப்படும் சிறப்பு வந்தே பாரத் ரயில் நாகர்கோவில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
- காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் ஆந்திர மாநில அமைச்சரும் நடிகருமான ரோஜா சாமி தரிசனம் செய்தார்.
- மறைந்த முன்னாள் தலைமைச் செயலர் எம்.எம். ராஜேந்திரன் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நிவாரணம் வழங்கினார்.
- தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்
இந்தியா:
- கர்நாடகாவில் ஜே.என்.1 வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
- மூன்று புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
- ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்க எம்பிக்கள் சஸ்பெண்டை ஆயுதமாக்கி உள்ளது பாஜக - தன்கருக்கு கார்கே பதில் கடிதம்
- ஏழைகள், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரமளிக்க முன்னுரிக்கை - பிரதமர் மோடி பேச்சு
- நாடு முழுவதும் 63 பேருக்கு ஜே.என்.1 வகை கொரோனா தொற்று பாதிப்பு
- ஜம்மு காஷ்மீர் ரியாசி மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
- நாளை மண்டல பூஜை; சபரிமலையில் குவியும் பக்தர்கள் - கட்டுப்பாடுகள் அறிவிப்பு
- சமூக வலைதளத்தில் வெடித்த பெரும் எதிர்ப்புகளுக்கு பிறகு, போர்ன்விடாவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை கேட்பெரி நிறுவனம் குறைத்துள்ளது.
உலகம்:
- நைஜீரியாவில் நிகழ்ந்த கோஷ்டி மோதல்; 113 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை.
- 5 நாள் சுற்றுப்பயணமாக ரஷ்யா சென்றார் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர்.
- இந்தோனேசியா நிக்கல் தொழிற்சாலையில் பயங்கர வெடிவிபத்து - 13 பேர் உயிரிழப்பு.
- ஹமாஸ் சுரங்கத்தில் இருந்து 5 பணய கைதிகளின் உடல்கள் மீட்பு - இஸ்ரேல் தகவல்.
விளையாட்டு:
- தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்குகிறது இந்திய அணி.
- 2வது டெஸ்ட் போட்டி: டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு.
- ப்ரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி ஹரியான ஸ்டீலர்ஸ் அணி வெற்றிப்பெற்றது.
- 2024 டி20 உலகக் கோப்பை வரை இங்கிலாந்து அணியின் துணைப் பயிற்சியாளராக பொல்லார்ட் அணியுடன் இணைந்திருப்பார்.
- 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஆடுவது குறித்து விரைவில் உங்களுக்கு பதில் கிடைக்கும் - ரோஹித் சர்மா
- ப்ரோ கபடி லீக்: பெங்கால் அணியை வீழ்த்தி தபாங் டெல்லி அணி வெற்றிப்பெற்றது.இன்