• நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குறுதிகள் - 16 பேர் கொண்ட குழுவை அமைத்த காங்கிரஸ்..!


மக்களவைத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை காங்கிரஸ் தொடங்கியுள்ளது. அதன்படி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கைக் குழுவை அறிவித்தது. இதில் ராகுல் காந்தியின் பெயர் இடம்பெறவில்லை. 2024 மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டை ஒப்புக்கொள்ள கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதே இந்தக் குழுவின் முக்கிய நோக்கமாகும்.இதனிடையே, தேசிய அளவிலான எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியக் கூட்டணியின் நான்கு கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளது. மேலும் படிக்க



  • வைகுண்ட ஏகாதசி.. கோவிந்தா முழக்கங்கள், சொர்க்க வாசல் திறப்பு.. கோயில்களில் நிரம்பி வழிந்த பக்தர்கள்


வைகுண்ட ஏகாதசியை ஒட்டி ஸ்ரீரங்கம் உள்ளிட்ட தமிழக பெருமாள் கோயில்களில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் இன்று அதிகாலை 4 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் எழுப்பிய  கோவிந்தா...கோவிந்தா..ரங்கா .... ரங்கா... என்ற முழக்கங்கள் கோயில் முழுக்க எதிரொலித்தது. இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.மேலும் படிக்க



  • வேகமெடுக்கும் கொரோனா! கர்நாடகாவை தொடர்ந்து இனி சண்டிகரிலும் முகக்கவசம் கட்டாயம்!


கர்நாடகாவைத் தொடர்ந்து சண்டிகரிலும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாகவே இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, மற்ற மாநிலங்களை காட்டிலும் கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு  அதிகரித்து வருகிறது. தற்போது அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு,   JN.1 புதிய வகை கொரோனா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான்


இந்திய குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைக்கப்பட்டுள்ளார்.6ஆவது முறையாக பிரான்ஸ் நாட்டின் தலைவர் ஒருவர் அழைக்கப்பட்டுள்ளார். உண்மையில், இந்தாண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடனே சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். ஆனால், தன்னால் இந்தியாவுக்கு பயணம்  செய்ய முடியாது என பைடன் தெரிவிக்கவே, அவருக்கு பதிலாக பிரான்ஸ் அதிபர் அழைக்கப்பட்டார். மேலும் படிக்க



  • கெத்து காட்ட நினைத்த தமிழ் தலைவாஸை சுத்து போட்ட பட்னா பைரேட்ஸ்; 13 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி


மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் ப்ரோ கபடி லீக் சீசன் 10 ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் பட்னா பைரேட்ஸ் அணியும் மோதிக்கொண்டது.  இதில் தமிழ் தலைவாஸ் அணியை பட்னா பைரேட்ஸ் அணி 46 -33 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியது. மேலும் படிக்க