• காலையிலேயே மகிழ்ச்சி! வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.39 குறைப்பு..!


வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 39 குறைக்கப்பட்டுள்ளது. திடீரென விலை குறைந்ததை அடுத்து சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 1929.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதத்தின் தொடக்க நாளில்தான் பெரும்பாலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அப்படி இருக்க, இன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென வணிக சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. மேலும் படிக்க



  • திடீரென பதுங்கி தாக்கிய பயங்கரவாதிகள்.. 5 வீரர்கள் வீரமரணம்.. ஜம்மு-காஷ்மீர் அதிர்ச்சி சம்பவம்..


ஜம்மு - காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேரா கி கலி என்ற பகுதியில் நேற்று மாலை 3.45 மணியளவில், இரண்டு ராணுவ வாகனங்களை சுற்றிவளைத்த பயங்கரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் வீர மரணமடைந்தனர். மேலும், 3 ராணுவ வீரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.இந்த எதிர்பாராத தாக்குதல் நடந்த உடனையே இந்திய ராணுவத்தினர் களமிறங்கி தகுந்த பதிலடியும் கொடுத்துள்ளனர். மேலும் படிக்க



  • 2024 ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்கலயா? கால அவகாசம் நீட்டிப்பு - எவ்வளவு நாள் தெரியுமா?


ஹஜ் பயணம் செல்வோர் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில், மத்திய அரசு நீட்டித்துள்ளது.  2024ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் மக்கள் விண்ணப்பிப்பதற்கு நேற்றுடன் அவகாசம் முடிவடைந்த நிலையில், ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் படிக்க



  • தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா மக்களவையில் நிறைவேற்றம்.. அதிரடி மாற்றங்கள் என்னென்ன?


முக்கியத்துவம் வாய்ந்த சட்ட மசோதா ஒன்று மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் இருந்து இந்திய தலைமை நீதிபதியை நீக்குவதற்கு இந்த மசோதா வழிவகை செய்கிறது. பிரதமரால் நியமிக்கப்படும் மத்திய அமைச்சர் ஆகிய மூன்று பேர் கொண்ட கமிட்டி வழங்கும் பரிந்துரையின் பேரில் தேர்தல் ஆணையர்களை குடியரசு தலைவர்  நியமிப்பார். இந்த கமிட்டிக்கு பிரதமர் தலைமை தாங்குவார். மேலும் படிக்க



  • தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றிய இந்தியா..! 


தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒருநாள் தொடரை 2-1  என்ற கணக்கிலும் கைப்பற்றியது.  மேலும் படிக்க