வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 39 குறைக்கப்பட்டுள்ளது. திடீரென விலை குறைந்ததை அடுத்து சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ. 1929.50க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

விலை நிர்ணயம்: 

தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் எல்பிஜி விலை, கச்சா எண்ணெய்யின் சர்வதேச விலையை மட்டுமே பெரிதாக சார்ந்துள்ளது. இவை அதிகமாகும் போது, ​​சென்னையில் எல்பிஜி சிலிண்டர் விலையும் அதிகரிக்கும். குறையும்போது சென்னையில் எல்பிஜி சிலிண்டர் விலையும் குறையும். அத்தியாவசிய மற்றும் தினக்கூலியை சார்ந்து இருக்கும் மக்களுக்கு அரசு இந்த விலைகளுக்கு மானியம் அளித்துள்ளது.

சென்னையில் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டரை பயன்படுத்துகின்றன. அதுவும் மக்களுக்கு எளிதாகவும் கிடைக்கிறது.  சென்னையில் இன்று மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டர்களின் விலை ₹ 918.50 . இவை ஒவ்வொரு மாதமும் இந்திய அரசால் திருத்தப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இந்த எரிவாயுவை உள்நாட்டு மற்றும் வணிக நோக்கங்களுக்காக பயன்படுத்துவதில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதத்தின் தொடக்க நாளில்தான் பெரும்பாலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் ஏற்படும். அப்படி இருக்க, இன்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென வணிக சிலிண்டரின் விலை குறைந்துள்ளது. இதன் காரணமாக காலையிலேயே மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

அடுத்த வருடம் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாகவே இந்த திடீர் விலை குறைப்பு என்று கூறப்படுகிறது. கடந்த 19 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலையிலும் எந்த ஒரு மாற்றமும் இல்லாத காரணமும் இதற்குதான் போல. 

கடந்த 10 மாதங்களாக சென்னையில் எல்பிஜி விலை ஏற்ற இறக்கம் (மானியம் அல்லாதது)

மாதம்

விலை/14.2 கிலோ

நவம்பர் 2023

ரூ.918.50

அக்டோபர் 2023

ரூ.918.50

செப்டம்பர் 2023

ரூ.918.50

ஆகஸ்ட் 2023

ரூ.918.50

ஜூலை 2023

ரூ.1,118.50

ஜூன் 2023

ரூ.1,118.50

மே 2023

ரூ.1,118.50

ஏப்ரல் 2023

ரூ.1,118.50

மார்ச் 2023

ரூ.1,118.50

பிப்ரவரி 2023

ரூ.1,068.50

ஜனவரி 2023

ரூ.1,068.50

டிசம்பர் 2022

ரூ.1,068.50