• நள்ளிரவில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழக வெள்ள பாதிப்பிற்கான கோரிக்கைகள் என்ன?


தமிழ்நாடு வெள்ள பாதிப்புகளுக்கான நிரந்தர தீர்வு பணிகளுக்கு 12 ஆயிரத்து 659 கோடி நிதி வழங்க வேண்டும் என, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார். கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு,தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.இச்சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு உடன் இருந்தார். மேலும் படிக்க 



  • "மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து அளிக்கப்படும்" - இஸ்ரேல் பிரதமருக்கு இந்திய பிரதமர் மோடி உறுதி


பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் உலகளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. இதனிடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை மீண்டும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் பிரதமர் மோடி.பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவி அளிக்கப்படும் என கூறியதாக எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க



  • வெள்ளப் பாதிப்பில் இருந்து மீளும் திருநெல்வேலி! நெல்லையில் மீண்டும் தொடங்கியது ரயில் போக்குவரத்து!


மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலியில் இருந்து மீண்டும் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ரயில் நிலையங்களில் தண்ணீர் தேங்கி குளம் போல காட்சியளித்த நிலையில் கடந்த 3 நாட்களாக தென் மாவட்ட ரயில்கள் மதுரை, விருதுநகர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்பட்டது. மேலும் 



  • சென்னைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் நெல்லை, தூத்துக்குடிக்கு அளிக்கப்படவில்லை - அண்ணாமலை குற்றச்சாட்டு


நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  நிவாரணப் பொருட்களை வழங்கினார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்வையிட்டார். பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,மக்களுக்கு தேவையான அடிப்படை உதவிகளை பாஜக செய்து கொண்டிருக்கிறது. சென்னைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நெல்லைக்கோ, தூத்துக்குடிக்கோ கிடைக்கவில்லை என்பது மக்கள் வைக்கும் குற்றச்சாட்டு என தெரிவித்தார். மேலும் படிக்க



  • ரூ.20 கோடிகளைக் கடந்த ஆஸ்திரேலியர்கள்; ஏலத்தில் ஆதிக்கம் செலுத்திய வேகப்பந்து வீச்சாளார்கள் 


 ஐபிஎல் லீக்கின் மினி ஏலம் நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த மினி ஏலத்தில் ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்படுள்ளார்.இவரை கொல்கத்தா அணி ரூபாய் 24.75 கோடிக்கு வாங்கியுள்ளது.  ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸை ரூபாய் 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.மேலும் படிக்க