- பெங்களூரில் அதிரடி சோதனை: 6 பேரை தட்டித் தூக்கிய என்.ஐ.ஏ: 7.3 லட்சம் பறிமுதல்!
லஷ்கர்-இ-தொய்பா (LeT) பயங்கரவாதியால் கைதிகளை தீவிரவாதிகளாக மாற்றியது தொடர்பான வழக்கில் பெங்களூருவில் தேசிய புலனாய்வு முகமை (NIA) இன்று அதாவது டிசம்பர் 13ஆம் தேதி பல இடங்களில் சோதனை நடத்தியதாக நாட்டின் உயர்மட்ட பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரின் வீடுகள் உட்பட ஆறு இடங்களில் இந்த வழக்கில் NIA இன் தொடர்ச்சியான விசாரணைகள் ஒருபுறம் நடந்தாலும் மற்றொரு புறம் இது தொடர்பான ஆவணங்கள் தேடப்பட்டு வந்தது. NIA அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கு சொந்தமான இடங்கள் மட்டும் இல்லாமல் சந்தேகத்தின் பேரில் இரண்டு நபர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை செய்தது. மேலும் படிக்க..
- ’முழு விசாரணை தேவை’ .. நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதிய வளாகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று வழக்கம்போல மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் நடைபெற்றன. அப்போது மதியம் 1 மணியளவில் திடீரென பார்வையாளர் மாடத்தில் இருந்த இரு இளைஞர்கள் கீழே மக்களவைக்கு குதித்தனர். அவர்கள் இருவரும் நிறங்களை வெளிக்கொணரும் வெடிகளை வைத்திருந்தனர். சபாநாயகர் இருக்கையை நோக்கி எம்.பி.க்களின் இருக்கை வழியாக நுழைய முயன்ற இருவரையும் அங்கிருந்த எம்.பி.,க்கள் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அதேசமயம் நாடாளுமன்றம் வெளியே 2 பெண்கள் போராட்டத்தில் ஈடுபட மொத்தமாக 4 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் படிக்க..
- ’நாடாளுமன்ற பாதுகாப்பை பலப்படுத்துங்கள்’ - மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!
நாடாளுமன்றத்தில் அத்துமீறி நபர்கள் நுழைந்த விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி முதல் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று வழக்கம்போல இரு அவைகளும் நடைபெற்று வந்த நிலையில், இரு இளைஞர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து அத்துமீறி அவைக்குள் நுழைந்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியான துரிதமாக செயல்பட்ட எம்.பி.,கள் இருவரையும் மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து அங்கிருந்த பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க..
- ”அந்த மனசுதான் சார் கடவுள்” - ஒரே ஒரு பயணிக்காக இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்து..!
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு செல்ல மற்றும் வரவிருக்கும் கேப் அதாவது வாடகைக் கார்களின் கட்டணம் உயர்ந்துள்ளதால், பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் வாயு வஜ்ரா சேவைகளுக்கு அதிகமான பயணிகள் மாறி வருகின்றனர். வோல்வோ கம்பெனியால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்துகள் விமான நிலைய பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் மலிவு விலையில் இருப்பதால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மேலும் படிக்க..
- அசால்ட்டாக வந்த அம்பாசிடர் கார்.. மறக்க முடியாத நாடாளுமன்ற தாக்குதல்.. 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன?
22 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய தினம் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், மீண்டும் நாடாளுமன்றத்தில் இரு இளைஞர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் பற்றி காணலாம். மேலும் படிக்க..