கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு  செல்ல மற்றும் வரவிருக்கும் கேப் அதாவது வாடகைக் கார்களின் கட்டணம் உயர்ந்துள்ளதால், பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் வாயு வஜ்ரா சேவைகளுக்கு அதிகமான பயணிகள் மாறி வருகின்றனர். வோல்வோ கம்பெனியால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த குளிரூட்டப்பட்ட சொகுசுப் பேருந்துகள் விமான நிலைய பயணிகளுக்கு வழங்கப்படும் சேவைகள் மலிவு விலையில் இருப்பதால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. சமீபத்தில், பெங்களூரைச் சேர்ந்த ஹரிஹரன் என்ற நபர் ஒருவர் வாயு வஜ்ரா பேருந்தில் பயணம் செய்த ஒரு வித்தியாசமான அனுபவத்தைப் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.  அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக பகிர்ந்துள்ள பதிவில்,  BMTC அதாவது பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகம் தனக்காக மட்டும் பேருந்தை இயக்கியது எப்படி என்று மகிழ்ச்சியுடனும் ஆச்சர்யத்துடனும் கேள்வி எழுப்பியுள்ளார். அனுபவத்திற்கு நன்றி தெரிவித்த அவர், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரை இதயப்பூர்வமாக பாராட்டி  அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் அவர் தனது பதிவில், ''விமான நிலையத்திலிருந்து திரும்பி வரும்போது, ​​இந்த 2 மனிதர்களும் எனக்காகவே, நேரத்தைக் கடைப்பிடிப்பதற்காக பேருந்தை இயக்கினார்கள். எனக்கு நல்ல அனுபவத்தையும், வீட்டிற்கு பாதுகாப்பான பயணத்தையும் அவர்கள் கொடுத்தனர்.டிஃபிக் நிறைந்த நகரத்தில் ஒரு பெரிய ரேபிடோவில் ஒரே பையன் இருப்பது வித்தியாசமாக உணர்ந்தேன்  எனவும் ஹரிஹரன் தனது எக்ஸ் பதிவில் எழுதி, இருவருடனும் ஒரு செல்ஃபியைப் பகிர்ந்துள்ளார். 


அவரது பதிவிற்குப் பதிலளித்த ஒருவர், இந்த பேருந்தினை இயக்க பேருந்துக்கு பெட்ரோல் மற்றும் தேய்மான செலவுகள் மட்டும் ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 95 செலவாகும் என்று தெரிவித்தார். இதற்கு ஹரிஹரன் இந்த பேருந்தினை இயக்க ஒரு கிலோ மீட்டருக்கு ரூபாய் 95 ஆகும் என எனக்கு இதுவரைக்கும் தெரியாது. அப்படியானால் நான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கிறேன்,'' என்று பதிலளித்தார். 






ஹரிஹரனின் பதிவிற்கு மற்றொருவர் எழுதினார், விமான நிலைய சேவைகளுக்கான பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகம் ஊழியர்கள் நன்கு பண்பட்டவர்கள் மற்றும் பயணிகளுக்கு மிகவும் உதவிகரமாக உள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.  மற்றொருவர், நீங்கள் BMTC ஐப் பயன்படுத்தியதில் மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.  இருப்பினும், சிலர் முழுவதுமாக ஒரு பயணிக்கு பேருந்து இயங்குவதன் பொருளாதார தர்க்கத்தையும் கேள்வி எழுப்பினர்.






நான்காவது ஒருவர், ''ஹரிஹரன் வேறு பேருந்தில் ஏறியிருக்க வேண்டும்'' என்றார். குறிப்பிடத்தக்க வகையில், வாயு-வஜ்ரா BMTC  பேருந்துகள் பெங்களூருவில் 21 பேருந்து வழித்தடங்களில் இயக்கப்படுகின்றது. 


அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பெங்களூரு பெருநகரப் போக்குவரத்துக் கழகம் (BMTC) நகரத்தில் உள்ள ஒரே பொதுப் பேருந்து போக்குவரத்து ஆகும், இது மாணவர்கள், தகவல் தொழில்நுட்ப சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் போன்ற பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப குடிமக்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட சேவைகளுக்காக இயக்கப்படுகின்றது. தற்போது, ​​BMTC 6600 பேருந்துகளைக் கொண்டுள்ளது, 5567 அட்டவணைகளின்படி இயக்குகிறது, 10.84 லட்சம் கிமீ'கள் மொத்தமாக ஒருநாளைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றது.  அதேபோல்  ஒவ்வொரு நாளும் சராசரியாக  சுமார் 29 லட்சம் பயணிகள் பெங்களூரு முழுவதும் பயணிக்கின்றனர்.


சென்னையில் சமீபத்தில் வெள்ளத்தின் போது, ஒரு பெண் பயணிக்காக சென்னை மாநகரப்பேருந்து இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.